கே.கே. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே.கே. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஏப்ரல், 2011

காதலிக்கும் ஆசை இல்லை - செல்லமே



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : கே.கே.-மஹதி-சின்மயி-டிம்மி  வருடம் : 2004

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை நான் முன்னாள்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தால் திட்டி திட்டி தித்திதாய்

( காதலிக்கும் ஆசையில்லை....

சந்திர சூரியர் எழுகையிலே உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே... விரிகிறதே...
அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமோ

நீ வெளிச்சத்தில் செய்து வாய்த்த ஒழி சிற்பமோ
ஹே மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ
ஹே மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ

( காதலிக்கும் ஆசையில்லை....

என் காதலி காதலி காதலி காதலி...
என்னை காதலி காதலி காதலி...

உன் முகம் கொண்ட பருவினிலும் வின் மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும் இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி... எனைக் கொல்லுதடி...
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே

காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போய்யா
உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை

என் காதலி காதலி காதலி காதலி...
என்னை காதலி காதலி காதலி...

வியாழன், 21 ஏப்ரல், 2011

பூவுக்கெல்லாம் சிறகு - உயிரோடு உயிராக



 இசை : வித்யாசாகர்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : கே.கே. - ஸ்ரீனிவாஸ்  வருடம் : 1998

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம் எல்லாம் காதல் செய்த மாயம்
இது எப்படி எப்படி நியாயம் எல்லாம் காதல் செய்த மாயம்

( பூவுக்கெல்லாம்...

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீலக் கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்கக் கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை


ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கைது செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுட்டுவிட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலர்ந்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

( பூவுக்கெல்லாம்...

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நினைத்து நினைத்து - 7ஜி ரெயின்போ காலனி



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : கே.கே  வருடம் : 2004

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ...
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே...
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ...
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்லுவேன்
உதிர்ந்து போன மலர்களின் மௌனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்லுவேன்
உடைந்து போன வளையலின் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னேமே தூக்கம் கலைந்ததே...

( நினைத்து நினைத்து...

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்

( நினைத்து நினைத்து ...