பிறைசூடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறைசூடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 டிசம்பர், 2012

நட்ட நடு கடல் மீது - செம்பருத்தி




இசை : இளையராஜா பாடல் : பிறைசூடன்
குரல்கள் : நாகூர் ஹனிபா - மனோ வருடம் : 1992

கடலிலே தனிமையில் போனாலும்
கண்மணி உன் நினைவில் களைப்பாருவேன்
அலைகளில் தத்தளித்தாலும்
அவள் நினைவில் முக்குளிப்பேனே
அடியே அமுதே இதுவே போதும்

நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உனை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்துரதமே
எட்டி எட்டிப் போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே

பிரிந்தது உயிரல்ல உடல்தான்
விட்டு விலகாது உயிர் காதலே
கரையிலே கன்னி துடித்தாளே
கட்டு மரம் மீதில் காளை தவித்தானே
இதுதான் காதலில் இடைவேளை

வந்தவர்கள் போவார்கள் போகாது காதல்
வங்கக்கடல் மீதாணை தேயாது காதல்
சுத்தி வரும் புயலென்ன
கொட்டுகின்ற இடியென்ன
அன்பு விளக்கென்றும் எரியும்
தெய்வத்திற்கு திரையென்ன
காதலுக்கு மறைவென்ன
உங்களுக்கு என்று புரியும்
ஆற்றிலே இக்கரையில் நின்று
அக்கரைக்கு தூது விடக் கூடலாம்
எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்
அன்னப் பறவையை நான் எங்கு தேடுவேன்
அடியே அமுதே வருந்தாதே

விட்டு இனி போகாது விடிவெள்ளி தூரம்
கட்டு மரம் கடலாடி கரையேறும் நேரம்
உப்பெடுக்கும் நேரம் ஒன்று
முத்தெடுக்கும் நேரம் இன்று
சித்திரமே செப்புக் குடமே
கட்டும் உண்டு காவலும் உண்டு
நம்மை என்ன செய்யும் இன்று
நித்திலமே முத்துரதமே

( நட்ட நடு கடல் மீது ...

திங்கள், 7 மார்ச், 2011

மணிக்குயில் இசைக்குதடி - தங்கமனசுக்காரன்



 இசை : இளையராஜா  பாடல் : பிறைசூடன்
 குரல்கள் : மனோ  வருடம் : 1992

மணிக்குயில் இசைக்குதடி... மனமதில் மயங்குதடி ...
மணிக்குயில் இசைக்குதடி... மனமதில் மயங்குதடி ...
சிறகுகள் விரிந்ததடி... இளங்குருவிகள் பறந்ததடி...
அடி மானே... மயங்குவதேனோ
உனைத்தானே... உருகுவதேனோ
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

( மணிக்குயில் இசைக்குதடி...

கட்டழகு தோட்டம் கண்டால் கம்பன் மகன் நானம்மா
சிட்டுவிழி சேதி சொன்னால் அந்த சுகம் தேனம்மா
பட்டம்விட்டு வாழும் வாழ்க்கை இன்று வந்து கூடுமோ
சட்டதிட்டம் ஏதுமில்லா பிள்ளைகுணம் ஆகுமோ
ஊர்கோலம் போகும்... கார்கால மேகம்
பூக்கோலம் நாளும்தான்
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

( மணிக்குயில் இசைக்குதடி...

ஆற்றுநீரில் ஆட்டம் போட்டு ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்றுப் போலே நெஞ்சை விட்டு போகுமா
அந்தி வந்து சேர்ந்தபின்னே நாள் முடிந்து போனதா
சந்தனந்தான் காய்ந்த பின்னே வாசமின்றி போனதா
நீராடும் மேகம்... தாலாட்டு கேளு
ஊர்கோலம் என்றும்தான்
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

( மணிக்குயில் இசைக்குதடி...