எஸ்.பி.பாலசுப்ரமணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.பி.பாலசுப்ரமணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஜூலை, 2020

செம்பூவே பூவே - சிறைச்சாலை



இசை : இளையராஜா பாடல் : அறிவுமதி
குரல்கள் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.எஸ். சித்ரா வருடம் : 1996


செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே
படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ...
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ...

செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே


அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்

தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டின் காதல் குற்றாலம்

தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா

நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி

கட்டிலும் கால்வலி கொள்ளாதோ...
கைவளை கைவளை கீறியதோ...


செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே


இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ

அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு
பாவை நெஞ்சில் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே

விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலா
பாவை மையல் சாயுதே மன்னவனின் மார்பிலா
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தாலோராடை சூடிக்கொள்வேன் நானே

பாயாகும் மடி சொல்லாதே...
பஞ்சணை புதையலின் ரகசியமே...

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே...
செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ...
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ...
படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ...
இமைகளும் உதடுகள் ஆகுமோ....
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ...
செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ...
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே...

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தாயின் மணிக்கொடி - ஜெய் ஹிந்த்



இசை : வித்யாசாகர் பாடல் : வைரமுத்து
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருடம் : 1994


ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்!
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த் - என்
இந்திய தேசம் இது - ரத்தம்
சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது...

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்!
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்!!

ஜெய்ஹிந்த்...ஜெய்ஹிந்த்

வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ !
பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ !!
தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ !
பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ !!
பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா !
வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா !!
எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே!
இது தீயில் எழுந்து வந்த தேசமே !!

தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த் !
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த் !!

சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ ?
வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும் !!
மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ ?
சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும் !!
சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு !
சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு !!
புலி போல் எழுக; புயல் போல் விரைக - அட
இளைய ரத்தம் என்ன போலியா ?
எழுத வேண்டும் புதிய இந்தியா !!

சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த் - என்
இந்திய தேசம் இது - ரத்தம்
சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது

ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...

ஞாயிறு, 24 மே, 2015

அகரம் இப்போ சிகரம் ஆச்சு - சிகரம்



இசை : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல் : வைரமுத்து
குரல்கள் : கே.ஜே.ஏசுதாஸ் வருடம் : 1990


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில்
பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

சங்கீதமே சந்நிதி…
சந்தோஷம் சொல்லும் சங்கதி...
சங்கீதமே சந்நிதி...
சந்தோஷம் சொல்லும் சங்கதி...

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

கார்காலம் வந்தால் என்ன
கடுங்கோடை வந்தால் என்ன
மழை வெள்ளம் போகும்
கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய்யன்பு போகும்
மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே....
நம்பிக்கை உங்கள் கையிலே.....

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு தரவா இல்லை
நம்பிக்கையே நல்லது...
எறும்புக்கும் வாழ்கை உள்ளது...

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

திங்கள், 3 டிசம்பர், 2012

கலைவாணியோ ராணியோ - வில்லுப்பாட்டுக்காரன்




இசை : இளையராஜா பாடல் : கவிஞர் வாலி
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் வருடம் : 1992


கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ

அவ மேலழகும் தண்டைக் காலழகும்
தெனம் பார்த்திருந்தா வில்லுப்பாட்டு வரும்

( கலைவாணியோ ராணியோ

பாதந்தொடும் பூங்கொலுசு தானதந்தோம் பாட
வேதங்களும் நாதங்களும் வேண்டிவந்தது கூட
பாதங்கள பார்த்ததுமே பார்வை வர்லியே மேலே
வேதனைகளை மாத்திடும் அவ விரிஞ்ச செண்பகச்சோல
பூத்ததய்யா பூவு அது கையழகு
தூக்குதய்யா வாசம் அது மெய்யழகு
நான் வந்தேன் வாழ்த்திப் பாட
நல்லதை சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீதைப்போல
கண்டதும் நின்னேன் சிலையைப்போல
இந்திரலோகம் சந்திரலோகம் சுந்தரலோகம் போற்ற

( கலைவாணியோ ராணியோ

கோடை மழை கொண்டு வரும்
கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும்
ராகம் என்கிற மோகம்
கோடியில ஒருத்தியம்மா கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊருலகில் அவளப் போல பேர் வருமா
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனசப் பறிக்கும் பவள விரிப்பு
விளங்கிடாத இனிப்பு
விவரம் புரிஞ்சிடாத துடிப்பு
சந்திர ஜோதி வந்தது போல்
சுந்தர தேவி ஜொலிப்பு

( கலைவாணியோ ராணியோ

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : சினேகன்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பி.சரண்-பிரஷாந்தினி
 வருடம் : 2010

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
ஒரஞ்சு போச்சே நகரவே இல்லே
தின்ன சோறும் செரிக்கவே இல்லே
பொலம்புறேன் நானே...

உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுர சத்தம்
உன் பேரா கேக்கிறதே

( அய்யய்யோ நெஞ்சு...

உன்ன தொடும் அனல் காத்து
கடக்கையிலே பூங்காத்து
கொழம்பி தவிக்குதடி என் மனசு

ஹோ திருவிழா கடைகள போல
திணருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மிரளுறேன் ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே
என்னை எரிச்சுபுட்டே நீயே

( அய்யய்யோ நெஞ்சு...

மழை சாரல் விழும் வேளை
மண் வாசம் அனல் வீச
உன் மூச்சு தொடவே நான் மெதந்தேன்

ஹோ...கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நெனைச்சயே
ஈரத்திலே அணைக்கிற சொகத்த
பார்வையிலே கொடுத்தாயே

பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுர போதும் யாரோடும் சேரலை நான்

( அய்யய்யோ நெஞ்சு...

திங்கள், 19 செப்டம்பர், 2011

முத்தமிழே முத்தமிழே - ராமன் அப்துல்லா



 இசை : இளையராஜா  பாடல் : அறிவுமதி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்-சித்ரா  வருடம் : 1996

முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன – மனம்
வேகுது மோகத்திலே...
நோகுது தாபத்திலே

( முத்தமிழே முத்தமிழே...

காதல்வாழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை
தாகம் வந்து பாய்விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே
மோகம் வந்து உயிர்குடிக்க கைவளையல் சிரிக்கிறதே
உந்தன் பேரைச் சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்
முத்தம் சிந்தச் சிந்த ஆனாந்தம் தான்

( முத்தமிழே முத்தமிழே...

கனவு வந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடியிருக்கா
ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா
பூவைக் கிள்ளும் பாவனையில் சூடிக்கொள்ளத் தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெறத் தீண்டுகிறாய்
மின்னல் சிந்தி சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்

( முத்தமிழே முத்தமிழே...

செவ்வாய், 31 மே, 2011

எங்கிருந்தோ இளங்குயிலின் - பிரம்மா



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1991

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம் – கொண்ட
சஞ்சலங்கள் மறைய ...

( எங்கிருந்தோ இளங்குயிலின்...

நீங்காமல் தானே நிழல்போல நானே
வருவேன் உண் பின்னோடு எந்நாளுமே
பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய்
தவறாக எடைபோட்டு சென்றாலும்தான்
பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம்
இந்த பால் மனம்

( எங்கிருந்தோ இளங்குயிலின்...

பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு
மறைத்தாலும் என் கண்கள் எமாறுமா
புரியாத புதிரா விளங்காத விடையா
இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா
என்னைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லையே
வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும்
அந்த நாள் வரும்

( எங்கிருந்தோ இளங்குயிலின்...

திங்கள், 2 மே, 2011

முத்து மணி மாலை - சின்ன கவுண்டர்



 இசை : இளையராஜா  பாடல் : ஆர்.வி.உதயகுமார்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சுசீலா  வருடம் : 1992

முத்து மணி மாலை
உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே

முத்து மணி மாலை
உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட

கொலுசு தான் மௌனமாகுமா மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசி பட்டு தந்த ராசாவே
வாக்கப் பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவுல வீசும் காத்துல
பாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை
என்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட

காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான் காவியம் பாசுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேசா தேகம் சூடேர

( முத்து மணி மாலை

நிலவே முகங்காட்டு - எஜமான்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி  வருடம் : 1993

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

( நிலவே முகங்காட்டு...

பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே

மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா

மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

சனி, 30 ஏப்ரல், 2011

கடவுள் அமைத்து வைத்த மேடை - அவள் ஒரு தொடர்கதை



 இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்  பாடல் : கண்ணதாசன்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1978

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

( கடவுள் அமைத்து...

நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே

ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு
அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே... ஆருயிரே... என் அத்தான்...

( கடவுள் அமைத்து...

கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா
கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா
ஆசை விமானத்தில் ஆனந்த மேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா
தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா
சிங்கார காலோடு சங்கீத தங்கைகள் சந்தோஷம் பாடுதம்மா

( கடவுள் அமைத்து...

கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா
கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா
wish you both happy life happy happy married life
பண்பான வேடத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓடுதம்மா
பண்பான வேடத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓடுதம்மா
பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாண்டு பாடுதம்மா

( கடவுள் அமைத்து...

ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா
உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா
அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா
அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான் இப்போது தெரிந்ததம்மா

( கடவுள் அமைத்து...

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா - புது வசந்தம்



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : முத்துலிங்கம்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்-பி.சுசீலா  வருடம் : 1990

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு
பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது
இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே

( பாட்டு ஒன்னு...

ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம் தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்
பசியெடுத்தால் பாட்டை உண்டு திசைகள் தேடி சேர்ந்தோம்
ஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்

( பாட்டு ஒன்னு...

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

தேடும் கண் பார்வை தவிக்க - மெல்ல திறந்தது கதவு



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி  வருடம் : 1986

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்... மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடித்தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

சனி, 23 ஏப்ரல், 2011

பொன்மாலை பொழுது - நிழல்கள்



 இசை : இளையராஜா  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : , எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் :

பொன்மாலை பொழுது – இது ஒரு
பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள் - இது ஒரு
பொன்மாலை பொழுது...

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்...
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ...

( இது ஒரு பொன்...

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால், வேள்விகளை நான் செய்வேன்

( இது ஒரு பொன்...

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

புஞ்சை உண்டு நஞ்சை - உன்னால் முடியும் தம்பி



 இசை : இளையராஜா  பாடல் : புலமைபித்தன்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1988

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா - இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா

( புஞ்சை உண்டு ...

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

( புஞ்சை உண்டு ...

ஆத்துக்குப் பாதை இன்று யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

( புஞ்சை உண்டு ...

வியாழன், 21 ஏப்ரல், 2011

வைகை நதியோரம் - ரிக்ஷா மாமா



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஜானகி  வருடம் : 1992

எண்ணம் எனும் ஏட்டில் நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்.. நித்தம் வரும் மூச்சி..

ஐயய்யே.. கொஞ்சம் இருங்க, கொஞ்சம் இருங்க..
என்னாங்க பாடுறீங்க? அப்படியில்லை..
நான் பாடுறேன் பாருங்க..

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம் அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

கரெக்ட்டு, இது கரெக்ட்டு.

மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்
மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஓர் சோலை புஷ்பம்தான் திரு கோயில் சிற்பம்தான்
ஓர் சோலை புஷ்பம்தான் திரு கோயில் சிற்பம்தான்
இதன் ராகம் தாளம் பாவம் அன்பை கூறும்

( வைகை நதியோரம்...

யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான்
இருமனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான் விழி பாடும் நேரம்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான் விழி பாடும் நேரம்தான்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காற்றே

( வைகை நதியோரம்...

அரைச்ச சந்தனம் - சின்னத்தம்பி



 இசை : இளையராஜா  பாடல் : கங்கை அமரன்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1991

செம்பவள முத்துக்கள சேர்த்து வச்ச சித்திரமே
தங்க வளை வைர வளை போட்டிருக்கும் முத்தினமே
வாய் திறந்து நீ சிரிச்சா பாத்திருக்கும் அத்தனையும்
நீ வளர்ந்துப் பார்த்திருந்தா தோத்து விடும் இத்தனையும்

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகு பெட்டகம் புதிய புத்தகம்ம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ...

( அரைச்ச சந்தனம்…

பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ
தேனடி அந்த திருவடி இவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ - அந்த
ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு
என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ

( அரைச்ச சந்தனம்…

மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும்
ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான்
பல ஜாலத்தோடு ஆளப் போகும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு
சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ

( அரைச்ச சந்தனம்…

சின்னச் சின்ன தூறல் - செந்தமிழ் பாட்டு



 இசை : இளையராஜா  பாடல் :
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1992


சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

( சின்ன சின்ன...

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா...

அது தீண்டும் மேகமில்ல..
தேகம் சிலிர்க்குதம்மா..

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னைச் சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமம் என உணர்த்திடும் மழையே..

( சின்ன சின்ன...

பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை

படிச்சவன் பாட்டை கெடுத்தான் கதையால்ல இருக்கு
பிழைக்கும்ன்னு எழுதலையே..
மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன்...

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேத்யை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடிஎனும் இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே..

( சின்ன சின்ன...

வியாழன், 14 ஏப்ரல், 2011

பாத கொலுசு பாட்டு - திருமதி.பழனிச்சாமி



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் :  வருடம் : 1992


பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பார்க்க கோடி பெறும் கோடி பெறும்
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பார்க்க கோடி பெறும் கோடி பெறும்

சித்தாடை போட்ட சின்னமணித்தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப்பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலதான்..

( பாத கொலுசு...

குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும்
மத்தாப்பு வானமெல்லாம் வாய்சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீனிரண்டை மைவிழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண்பாவை அழகு
ஒன்னாக கலந்த முந்நூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்

(பாத கொலுசு)

செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வச்ச சித்திரமே
தென்பாண்டி கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனி சந்தனமே
தென்காசித் தூறலிலே கண்விழித்த செண்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ

( பாத கொலுசு...

பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர்செனத்தி
கல்யாண பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டு உடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு காலநேரம் மாலையிடத்தான்

( பாத கொலுசு...

கேளடி கண்மணி - புது புது அர்த்தங்கள்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1989

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ...ஆ...நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

( கேளடி கண்மணி...

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தானேம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

( கேளடி கண்மணி...

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்தராகம் உன்னால்தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

( கேளடி கண்மணி...

குருவாயூரப்பா குருவாயூரப்பா - புது புது அர்த்தங்கள்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்-சித்ரா  வருடம் : 1989

குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்கி
ராதை உனக்கு சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
ராதை உனக்கு சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

( குருவாயூரப்பா...

தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடு ஜாமம் வரையில்
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்
அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவநன்தான்
வா வா என் தேவா செம்பூவாய்
என் தேகம் சேராதோ உன் கைகளிலே

( குருவாயூரப்பா...

ஏகாந்த நினைவும் எறிகின்ற நிலவும்
என் மேலே ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க
பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்
மாது உன் மீது எப்போது என் மோகம்
பாயாதோ சொல் பூங்கொடியே

( குருவாயூரப்பா...