திங்கள், 20 பிப்ரவரி, 2012

தென்றலே தென்றலே - காதல் தேசம்




 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் :
 குரல்கள் : உன்னிகிருஷ்ணன் - மனோ  வருடம் : 1996

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து நீ தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

( தென்றலே தென்றலே...

காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீயானேன்
இரவில் காயும் முழுநிலா
எனக்கு மட்டும் சுடும்நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்கவைக்கும் நிலவே
தூக்கமின்றி நீ ஏன் வாடினாயோ...

( தென்றலே தென்றலே...

மாலைவானில் கதிரும் தூங்கும்
மடியில் சாய்ந்து தூங்கு
பூமியாவும் தூங்கும் போது
பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்குத் தெரியும் – என்
மனதின் காதல் தெரியுமா
சொல்ல வார்த்தைக் கோடிதான் – உனை
நேரில் கண்டால் மௌனமேன்
தூங்கவைக்கப் பாடினேன் – நான்
தூக்கமின்றி வாடினேன்

( தென்றலே தென்றலே...

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

அழகு நிலவே - பவித்ரா




 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் :
 குரல்கள் : சித்ரா  வருடம் : 1994

அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலைவார்த்தாயே
என் பாதிஉயிரை திருப்பித் தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னைச் சுமந்ததில்லை நானும் உன் தாயே...

( அழகு நிலவே கதவு...

சொந்தங்கள் என்பது தாய் தந்தது - இந்த
பந்தங்கள் என்பது யார் தந்தது
இன்னொரு தாய்மைதான் நான் கண்டது - அட
உன்விழி ஏனடா நீர் கொண்டது
அன்புதான் தியாகமே அழுகைதான் தியானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்குப் புரியாதே...

( அழகு நிலவே கதவு...

பூமியை நேசிக்கும் வேர்போலவே - உன்
பூமுகம் நேசித்தேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன்போலவே - உன்
நேசத்தில் வாழுவேன் நானாகவே
உலகம் மாறுமே உறவுகள் வாழுமே
கடலைவிடவும் ஆழம் எந்தன் கண்ணீர்த்துளி ஒன்றே...

( அழகு நிலவே கதவு...

சனி, 18 பிப்ரவரி, 2012

ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : சின்மயி  வருடம் : 2000

ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வானம் முடியும் இடம் நீதானே
காற்றைப்போல நீ வந்தாயே
சுவாசமாகி நீ நின்றாயே
மார்பில் ஊரும் உயிரே


( ஒரு தெய்வம் தந்த...

எனது சொந்தம் நீ எனது பகையும் நீ
காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ....

( ஒரு தெய்வம் தந்த...

எனது செல்வம் நீ எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ....

( ஒரு தெய்வம் தந்த...

புதன், 15 பிப்ரவரி, 2012

கருப்பு நிலா-என் ஆசை மச்சான்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : சித்ரா  வருடம் : 1994

கருப்பு நிலா... கருப்பு நிலா...

கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
துளித்துளியா கண்ணீர் விழுவதேன்
கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
துளித்துளியா கண்ணீர் விழுவதேன்

சின்ன மானே மாங்குயிலே – உன்
மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போலிருப்பேன்
இந்த பூமியில் வாழும்வரை
எட்டு திசையாவும் கட்டி அரசாள
வந்த ராசா நீதானே...

பத்து மாசம் மடியேந்தி பெத்தெடுத்த மகராசி
பச்சபுள்ள உன்ன விட்டு போனதெண்ணி அழுதாயா
மாமன் வந்து எனைக்காக்க நானும் வந்து உனைக்காக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம் நாளைவரும் நமக்காக
காலம் உள்ள காலம் வாழும் இந்த பாசம்
பூவிழி இமைமூடியே சின்ன பூவே கண்ணுறங்கு


( கருப்பு நிலா நீதான்...

வண்ண வண்ண முகம்காட்டி வானவில்லின் நிறம்காட்டி
சின்னச் சின்ன மழலைபேசி சித்திரம் போல் மகனே வா
செம்பருத்தி மலர்போலே சொக்கவெள்ளி மணிபோலே
கன்னம்ரெண்டும் மின்ன மின்ன கண்மணியே மடிமேல் வா
பாட்டு தமிழ்பாட்டு ஆடு அதை கேட்டு
ஆடிடும் விளையாடிடும் தங்கத்தேரே நீதானே...

( கருப்பு நிலா நீதான்...

மன்னவா மன்னவா - வால்ட்டர் வெற்றிவேல்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : சுனந்தா  வருடம் : 1993

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா - நீ
புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ ..
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ…

( மன்னவா மன்னவா...

நாள்தோறும் காவல் நின்று நமை காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதி ராஜன் இன்று பலதேசம் நீயும் வென்று
வரவேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென்மதுரை சீமையெல்லாம் அரசாளும் உன்னைக் கண்டு
திருத்தோளில் மாலைசூடும் மகராணி யாரோ இங்கு
ஒளிவிடும் எதிர்காலம் ஒன்று
உருவாகும் நாளை இங்கு
பனிவாய் மலரே மடிமேல் உறங்கு...

( மன்னவா மன்னவா …

மீனாட்சி கையில் கொண்டு அருள்கூறும் கிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரைக் கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கொரு குறை நேர்ந்திடாது
வளர்ப்பேனே தோளின் மீது
பனிவாய் மலரே மடிமேல் உறங்கு…

( மன்னவா மன்னவா …

பொம்முக்குட்டி அம்மாவுக்கு - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : கே.ஜே.ஏசுதாஸ்  வருடம் : 1988

பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ...
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ...
வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்

ரெண்டு தாய்க்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முல்லை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீ அறிவாயோ (2)

உன்னை நினைத்து உருகிடும் மாது
உன்னை பிரிய மனம் துணியாது
பூவே பனிப்பூவே நீதான் இல்லாது
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

( பொம்முக்குட்டி …

பெற்ற தாய்படும் பாடு
பிள்ளை தானறி யாது
இது காக்கையின் கூடு
இங்கே பூங்குயில் பேடு  (2)

வந்த உறவை இவள் விடுவாளோ
சொந்த உறவை அவள் தருவாளோ
பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு
பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

( பொம்முக்குட்டி …