செவ்வாய், 20 செப்டம்பர், 2011

அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : சினேகன்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பி.சரண்-பிரஷாந்தினி
 வருடம் : 2010

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
ஒரஞ்சு போச்சே நகரவே இல்லே
தின்ன சோறும் செரிக்கவே இல்லே
பொலம்புறேன் நானே...

உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுர சத்தம்
உன் பேரா கேக்கிறதே

( அய்யய்யோ நெஞ்சு...

உன்ன தொடும் அனல் காத்து
கடக்கையிலே பூங்காத்து
கொழம்பி தவிக்குதடி என் மனசு

ஹோ திருவிழா கடைகள போல
திணருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மிரளுறேன் ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே
என்னை எரிச்சுபுட்டே நீயே

( அய்யய்யோ நெஞ்சு...

மழை சாரல் விழும் வேளை
மண் வாசம் அனல் வீச
உன் மூச்சு தொடவே நான் மெதந்தேன்

ஹோ...கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நெனைச்சயே
ஈரத்திலே அணைக்கிற சொகத்த
பார்வையிலே கொடுத்தாயே

பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுர போதும் யாரோடும் சேரலை நான்

( அய்யய்யோ நெஞ்சு...

திங்கள், 19 செப்டம்பர், 2011

ஒத்த சொல்லால - ஆடுகளம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : ஏகாதசி
 குரல்கள் : வேல்முருகன்  வருடம் : 2010

ஹே...ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வெச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வெச்சு
நித்தங் குடிச்சு என்ன கொன்னாடா
ஏ...பொட்ட காட்டுல - ஆலங்கட்டி
மழ பெஞ்சு ஆறொன்னு ஒடுறத பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

என் பவுடர் டப்பா தீர்ந்துபோனது
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது
நான் குப்புரக்க படுத்து கெடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே
ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயா
மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே

( ஹே.. ஒத்த சொல்லால...

ஏ...கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவன் கண்ணழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழ செவப்பு முத்தாத எளம் சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்

( ஹே.. ஒத்த சொல்லால...

அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள்குறிச்சு தட்டு மாத்துவேன்
ஏ..ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாளே என்ன ஒருவாட்டி....

( ஹே ஒத்த சொல்லால...

முத்தமிழே முத்தமிழே - ராமன் அப்துல்லா



 இசை : இளையராஜா  பாடல் : அறிவுமதி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்-சித்ரா  வருடம் : 1996

முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன – மனம்
வேகுது மோகத்திலே...
நோகுது தாபத்திலே

( முத்தமிழே முத்தமிழே...

காதல்வாழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை
தாகம் வந்து பாய்விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே
மோகம் வந்து உயிர்குடிக்க கைவளையல் சிரிக்கிறதே
உந்தன் பேரைச் சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்
முத்தம் சிந்தச் சிந்த ஆனாந்தம் தான்

( முத்தமிழே முத்தமிழே...

கனவு வந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடியிருக்கா
ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா
பூவைக் கிள்ளும் பாவனையில் சூடிக்கொள்ளத் தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெறத் தீண்டுகிறாய்
மின்னல் சிந்தி சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்

( முத்தமிழே முத்தமிழே...

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஒரு மலையோரம் - அவன் இவன்



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : விஜய் ஜேசுதாஸ்-பேபி ஸ்ரீநிஷா
பேபி பிரியங்கா - பேபி நித்யஸ்ரீ
 வருடம் : 2011

ஒரு மலையோரம்
அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கைகோர்த்து என் தலைசாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லங்கொஞ்சி நீ பேச உள்ளமுருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதுமடா... இந்த ஜென்மம் தீருமடா...
ஹோ... ஹோ...

( ஒரு மலையோரம்...

பெண்ணே முதல்முறை உன் அருகிலே வாழ்கிறேன்
போதும் போதும் விடு உன் நினைவிலே தோய்கிறேன்
என்னானது எந்தன் நெஞ்சம் ஏனிந்த மாற்றமோ
பெண்ணானதும் நாணம் வந்து தன் வேலையைக் காட்டுமோ
உன் எதிரிலே....ஏ...ஏ...
எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே
என்னுள்ளிருந்து நீ பேச
இன்னுமென்ன நான் பேச
இந்த மயக்கம் போதுமடி
இன்னும் நெருக்கம் வேண்டுமடி...ஹோ..ஹோ...

( ஒரு மலையோரம்...

உன்னைக் காணும்வரை நான் கனவிலே வாழ்ந்தவன்
உன்னைக் கண்டேன் பெண்ணே உன் நினைவிலே வாழ்கிறேன்
என் தனிமையின் ஓரம் வந்து இனிமைகள் ஊட்டினாய்
என் தாயிடம் பேசும் போதும் வெறுமையைக் கூட்டினாய்
நம் காதலிலே....ஏ...ஏ...
மனமது புகையினை போலே
மறைத்தவர் யாருமே இல்லை
என்னுள் நீ சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மறைக்க
இந்த வார்த்தை போதுமடி
எந்தன் வாழ்க்கை மாறுமடி... பெண்ணே...

என்னமோ ஏதோ - கோ



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : மதன் கார்க்கி
 குரல்கள் : ஆலாப் ராஜு,
பிரஷாந்தினி, ஸ்ரீசரண்,மெக் ஜாஸ்
 வருடம் : 2011


என்னமோ ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ...
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்


ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ...
மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்தி சிதறுது வெளியில்
என்னமோ ஏதோ...
சிக்கித் தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டு பறக்குது தொலைவில்

ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ... ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது நாளை

நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா? பூவே...

முத்தமிட்ட மூச்சுக் காற்றில்
பட்டுப் பட்டு கெட்டு போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ...
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா? பூவே...

சுத்தி சுத்தி உன்னை தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
கனா காண தானே பெண்ணே
கண் கொண்டு வந்தேனோ
வினாக்கான விடையும் காண
கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
ஒ ஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்