பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

அமைதியில் ஒளியரும்பும் - பாட்டருவி



இசை : பாடல் : பாரதிதாசன்
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் வருடம் : ----

அதிகாலை

அமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்

( அமைதியில் ஒளி...

இமை திறந்தே தலைவி கேட்டாள் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்

( அமைதியில் ஒளி...

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைத்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்

( அமைதியில் ஒளி...

பெற்றவர் கூடத்தில் மனைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைக ளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்க லாயினர் அன்பு திருந்தி

( அமைதியில் ஒளி...

சொல்வதென்றால் வெட்கமடி தோழி - பாட்டருவி



இசை : பாடல் : பாரதிதாசன்
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் வருடம் : ----


சொல்லும் செயலும்

சொல்வதென்றால் வெட்கமடி தோழி - சொல்லச்
சொல்லுகின்றாய் என்துணைவன்
சொன்னதையும் செய்ததையும்

( சொல்வதென்றால்...

முல்லைவிலை என்ன என்றான்
இல்லைஎன்று நான் சிரித்தேன்
பல்லைஇதோ என்று காட்டிப்
பத்துமுத்தம் வைத்து நின்றான்

( சொல்வதென்றால்...

பின்னலைப்பின் னேகரும்பாம் பென்றான் - உடன்
பேதைதுடித் தேன்அணைத்து நின்றான்
கன்னல் என்றான் கனியிதழைக்
காதல்மருந் தென்று தின்றான்.

( சொல்வதென்றால்...

நிறையிருட்டில் ஒருபுதிரைப் போட்டான்;
நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான்.
குறைமதியும் இல்லை என்றேன்.
குளிர்முகத்தில் முகம் அணைத்தான்.

( சொல்வதென்றால்...

தமிழரென்று சொல்வோம் - பாட்டருவி



இசை : பாடல் : பாரதிதாசன்
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் வருடம் : ----


பகை நடுக்கம்

தமிழர் என்று சொல்வோம் - பகைவர்
தமை நடுங்க வைப்போம்
இமய வெற்பின் முடியிற் - கொடியை
ஏற வைத்த நாங்கள்.

( தமிழர் என்று...

நமத டாஇந் நாடு - என்றும்
நாமிந் நாட்டின் வேந்தர்
சமம்இந் நாட்டு மக்கள் - என்றே
தாக்கடா வெற்றி முரசை!

( தமிழர் என்று...

எந்த நாளும் தமிழர் - தம்கை
ஏந்தி வாழ்ந்த தில்லை.
இந்த நாளில் நம்ஆணை - செல்ல
ஏற்றடா தமிழர் கொடியை.

( தமிழர் என்று...

வையம் கண்ட துண்டு - நாட்டு
மறவர் வாழ்வு தன்னைப்
பெய்யும் முகிலின் இடிபோல் - அடடே
பேரி கைமு ழக்கு.

( தமிழர் என்று...

எல்லாம் இருந்த தமிழ்நாடு - பாட்டருவி



இசை : பாடல் : பாரதிதாசன்
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் வருடம் : ----


எழில்மிகு தமிழ்நாடு

எல்லாம் இருந்த தமிழ்நாடு
படிப்பில்லாமல்
பொல்லாங் கடைந்தது பிற்பாடு,
சொல்லும் இயற்கை தரும் செல்வம்
இல்லை என்னாமல்
நெல்லும் சுவை முக்கனி
நெய் பால் கரும்பு வெல்லம்

( எல்லாம் இருந்த...

தென்றல் சிலிர்க்க வரும் சோலை
தனிற்குயிலும்
தேன்சிட்டும் பாடும் அங்கு மாலை
மணக்கும் மலர்
ஒன்றல்ல மூலைக்கு மூலை
தெருக்கள் தொறும்
ஒரத்தில் நிழல் தரும் சாலை
இடையிடையே
தென்னை மாதுளைகள் வாய்ப்பு
வாழை மரத்தில்
தேனாகத் தொங்கும் பழச்சீப்பு
விளா இலந்தை
எந்நாளுமே கொடுக்கும் காய்ப்பு
குலுங்கும் எலி
மிச்சை நாவல் எங்கும் தோப்பு
உலகினிலே
எங்கும் இல்லை இப்படி
என்பது கவிஞர் தீர்ப்பு!

( எல்லாம் இருந்த...

வாழ்வினில் செம்மையை - பாட்டருவி



இசை : பாடல் : பாரதிதாசன்
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் வருடம் : ----

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே !
மாண்புகள் நீயே என் தமிழ் தாயே !
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே ;
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே !

தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே !

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !

சனி, 20 ஏப்ரல், 2013

இயற்கைச் செல்வம்-பாட்டருவி




 இசை :  பாடல் : பாரதிதாசன்
 குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன்  வருடம் : ----


இயற்கைச் செல்வம்

விரிந்த வானே, வெளியே - எங்கும்
விளைந்த பொருளின் முதலே!
திரிந்த காற்றும், புனலும் - மண்ணும்
செந்தீ யாவும் தந்தோய்.
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே!
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!

அசைவைச் செய்தாய் ஆங்கே - ஒலியாம்
அலையைச் செய்தாய் நீயே!
நசையால் காணும் வண்ணம் - நிலமே
நான்காய் விரியச் செய்தாய்!
பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம்
பைந்தமிழ் பேசச் செய்தாய்!
இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,
ஏந்திழை இனிமைக் குரலால்!

எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்
எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் - எமையே
துய்க்கச் செய்தாய் அடடா!
கல்லா மயில், வான்கோழி - புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் `ஆடற் - கலை'தான்
அமையச் செய்தாய் வாழி!

வானம்பாடி-பாட்டருவி




 இசை :  பாடல் : பாரதிதாசன்
 குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன்  வருடம் :


வானம்பாடி

வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?

வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல்எடுத்துப்
பெய்த அமுதா? எனநானே பேசுகையில்,

நீநம்பாய் என்று நிமிர்ந்தஎன் கண்ணெதிரில்
வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது
ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க
நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்.

உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்
பாடிக்கொண்டே யிருப்பாய்! பச்சைப் பசுந்தமிழர்
தேடிக்கொண் டேயிருப்பார் தென்பாங்கை உன்பால்!

அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன்
இசைமழையால் இன்புறுவோம் யாம்.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

வாழ்வினில் செம்மையை - பாட்டருவி




இசை : பாரதிதாசன் பாடல் : பாரதிதாசன்
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் வருடம் : - - - -


வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே !
மாண்புகள் நீயே என் தமிழ் தாயே !
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே ;
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே !

தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே !

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !

ஞாயிறு, 1 மே, 2011

தமிழுக்கும் அமுதென்று பேர் - பஞ்சவர்ணக்கிளி



 இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்  பாடல் : பாரதிதாசன்
 குரல்கள் : பி.சுசீலா  வருடம் : 1965

தமிழுக்கும் அமுதென்று பேர் ! – அந்த
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்னறு பேர் ! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் ! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருபித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர் !
தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உரிமை செம்ப்யிர்க்கு வேர்

( தமிழுக்கும் அமுதென்று...

தமிழ் எங்கள் இளமைக்கு பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் –இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன்

( தமிழுக்கும் அமுதென்று...

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள் வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

( தமிழுக்கும் அமுதென்று...