ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
சனி, 26 பிப்ரவரி, 2011
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரைதேவன்
| இசை : இளையராஜா | பாடல் : கவிஞர் வாலி |
| குரல்கள் : மலேசியா வாசுதேவன் - ஜானகி | வருடம் : 1993 |
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப்பூங்கொடி
கொஞ்சிப்பேசி கொஞ்சிப்பேசி கொஞ்சும் பைங்கிளி
வாசப்பூவில் தேனே வண்ண நிலாவே மானே
காவல் ஏது கட்டுக்கள் ஏது காட்டாறு பாயும்போது
(மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்...
நீயில்லாது நித்திரை ஏது பாயில் வாடும் பைங்கிளி
நீயிருந்தால் சித்திரைக் கூட வாடைவீசும் மார்கழி
நீயில்லாது நித்திரை ஏது பாயில் வாடும் பைங்கிளி
நீயிருந்தால் சித்திரைக் கூட வாடைவீசும் மார்கழி
மாதம் தேதிப் பார்த்து காதல் பூக்காது
நீரை மீனும் சேர ஊரைக் கேட்காது
பருவ ராகம் பாட புதிய கோலம் போட
ஆதியந்தம் அனைத்தும் சொந்தம் நீங்காது கூடும்போது
(மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்...
நாலு பேர்கள் கண்படக்கூடும் நீயும் நானும் கூடினால்
ராஜயோகம் கைவரும் இன்று தோளில் தொகை ஆடினால்
நாலு பேர்கள் கண்படக்கூடும் நீயும் நானும் கூடினால்
ராஜயோகம் கைவரும் இன்று தோளில் தொகை ஆடினால்
தேவன் எந்தன் ஜீவன் தேவி உன்னோடு
மானின் கால்கள் போகும் மாமன் பின்னோடு
வாழும் நாட்கள் யாவும் உன்னுடன் வாழவேண்டும்
சொந்தம் என்று பந்தங்கள் என்று நீயின்றி யாருமில்லை
(மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்...
ராசிதான் கைராசிதான் - என் ஆசை மச்சான்
| இசை : தேவா | பாடல் : கவிஞர் வாலி |
| குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சித்ரா | வருடம் : 1994 |
ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்
ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவ இவதான் தெரியாதா
பூச்சூடி உன் நெனப்புல மெதப்புல இருப்பவ இவதான் புரியாதா
எந்நாளும் என் ஆசை மச்சானே
உன்கூடதான் நானிருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப்பிறந்தேனே
( ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான் ...
ஊர்சனம் வாழ்த்தும் ரசகுமாரன் உனக்கொரு குறையேது
மாமன் இல்லாது பூமியின் மீது எனக்கொரு துனையேது
கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ கையோடு அனைச்சேனே
என்பேர மறந்து உண்பேரத்தனே என்ப்போதும் நினைச்சேனே
பனி பூப்போல் சிரிக்குது பால்போல் இருக்குது பாவை மனம்தானே...
(ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்
வீசுற காத்தும் வயல்வெளி நாத்தும் படிக்குது எசப்பாட்டு
ஆண் கிளி மனசும் பூங்கிளி மனசும் தவிக்குது அதக்கேட்டு
ஒன்னாக கலந்த சந்தோச உறவு எந்நாளும் விலகாது
கண்ணாடி போல கல்லால அடிச்சா தண்ணீரு உடையாது
பட்டு பாயப் போட்டது பன்னீர் தூவுது பூக்கள் நமக்காக
(ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்
சுட்டும் விழிச்சுடரே - கஜினி
| இசை : ஹாரிஸ் ஜெயராஜ் | பாடல் : நா.முத்துகுமார் |
| குரல்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி பாம்பே ஜெயஸ்ரீ | வருடம் : 2005 |
சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...
என்னுலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப்பையில் உன் படம்
தொட்டுத்தொட்டு உரச என்னிதயம் பற்றிக் கொள்ளுதே
உன்விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன் - உன்னாலே
கண்விழித்து சொப்பனம் கண்டேன்....
(சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...
மெல்லினம் மார்பில் கண்டேன் வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்...
தூக்கத்தில் உளறல் கொண்டேன் தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன் - உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்றேன்
வண்டை உண்ணும் பூக்கள் என்றேன்
(சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...
மரங்கொத்திப் பறவையொன்று மனங்கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர்வரை தந்தேன்
தீயின்றி திரியுமின்றி மேகங்கள் எரியுமென்று
இன்றுதானே நானும் கண்டுகொண்டேன்
மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும்போது மழை அழகு - கண்ணா நீ
கோவப்பட்டால் வெயில் அழகு - கண்ணா நீ
கோவப்பட்டால் வெயில் அழகு
(சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...
என்ன அழகு எத்தனை அழகு - லவ் டுடே
| இசை : சிவா | பாடல் : வைரமுத்து |
| குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் | வருடம் : 1996 |
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்
(என்ன அழகு ...
அன்பே உன் ஒற்றைப் பார்வை அதைத் தானே யாசிதேன்
கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் கல்டலும் நிலவும் அடி தீ கூட தித்தித்தேன்
மாணிக்கத் தேரே உனை மலர் கொண்டு பூசிதேன்
என்னை நான் கிள்ளி இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் போகுமே
(என்ன அழகு ....
நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை முடிய அடி தமிழ் வார்த்தைக் கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழுப் பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மகாராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே
( என்ன அழகு ....
வெள்ளி, 25 பிப்ரவரி, 2011
மாதவா... சேது மாதவா - சீனு
| இசை : தேவா | பாடல் : கவிஞர் வாலி |
| குரல்கள் : ஹரிஹரன் | வருடம் : 2000 |
மாதவா... சேது மாதவா
உன் கையில் உள்ள புல்லாங்குழல் நான் மாதவா
மாதவா… என் மாதவா
என் அம்மை அப்பன் ஆசான் நீதான் மாதவா
கோகுலம் மேவிய மாதவா
கோபியர் கூவிய மாதவா
குன்றினை ஏந்திய மாதவா
( மாதவா..
குருவாயூர் திருக்கோயில் குடிகொண்ட பெருமானே
குழலிசை தினந்தோறும் கேட்கிறதே
மதுசூதன் திருப்பாதம் மறவாத மனதுக்குள்
புதுப்புது இசைப்பூக்கள் பூக்கிறதே
வாசத்தமிழிசையில் வழியும் செந்தேனை
வாரி எனக்களித்த வள்ளல நீ தானே
தேவா உன் திரு அருளை தேயாத திருப்புகழை
நாவாற நாள்முழுக்க பேசவா நானும் பாடவா
தாயாக எனை வளர்த்து தெவிட்டாத இசைகொடுத்து
வாயாற பாடவைத்தாய் கேசவா என் கேசவா
கேசவா ஆதி கேசவா
என் நெஞ்சில் வாழும் தெய்வம் நீதான் கேசவா
கூட்டங்கள் இருந்தாலும் கரகோஷம் எழுந்தாலும்
எனக்கது பெரிதாக தோன்றுமா
இசை ஞானக்கடல் நீயே எதிர்வந்து அமர்ந்தாயே
இதைவிட பெரும்பேறு வேண்டுமா
ஏழு ஸ்வரங்களையும் எதிரில் கண்டேனே
வாழும் கலைமகளின் வடிவம் என்பேனே
நீபார்த்து வளர்ந்த பிள்ளை
உன் கையில் தவழ்ந்த முல்லை
மேன்மேலும் வளர்வதற்கு வாழ்த்திடு நீ வாழ்த்திடு
உயிரே உன் திருவடிக்கு ஒருகோடி வந்தனங்கள்
உளமாற நான் கொடுப்பேன் ஏற்றிடு நீ ஏற்றிடு
கேசவா ஆதி கேசவா
என் நெஞ்சில் வாழும் தெய்வம் நீதான் கேசவா
கேசவா ஆதி கேசவா
என் அம்மை அப்பன் ஆசான் நீதான் கேசவா
நீயின்றி நானில்லை கேசவா
நீரின்றி மீனில்லை கேசவா
நானுந்தான் கைப்பிள்ளை கேசவா
கேசவா ஆதி கேசவா ....
வியாழன், 24 பிப்ரவரி, 2011
நான் பாடும் பாடல்
தமிழில் தட்டச்சு செய்ய கீழ்காணும் படிவத்தில்
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஒரு இடைவெளி விடவும்
(Press Ctrl+g to toggle between English and தமிழ்)
Transliteration in Rich Text Editor
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஒரு இடைவெளி விடவும்
(Press Ctrl+g to toggle between English and தமிழ்)
நீங்கள் கேட்டவை
தமிழில் தட்டச்சு செய்ய கீழ்காணும் படிவத்தில்
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஒரு இடைவெளி விடவும்
(Press Ctrl+g to toggle between English and தமிழ்)
Transliteration in Rich Text Editor
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஒரு இடைவெளி விடவும்
(Press Ctrl+g to toggle between English and தமிழ்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)