உன்னிகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உன்னிகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 பிப்ரவரி, 2012

தென்றலே தென்றலே - காதல் தேசம்




 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் :
 குரல்கள் : உன்னிகிருஷ்ணன் - மனோ  வருடம் : 1996

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து நீ தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

( தென்றலே தென்றலே...

காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீயானேன்
இரவில் காயும் முழுநிலா
எனக்கு மட்டும் சுடும்நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்கவைக்கும் நிலவே
தூக்கமின்றி நீ ஏன் வாடினாயோ...

( தென்றலே தென்றலே...

மாலைவானில் கதிரும் தூங்கும்
மடியில் சாய்ந்து தூங்கு
பூமியாவும் தூங்கும் போது
பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்குத் தெரியும் – என்
மனதின் காதல் தெரியுமா
சொல்ல வார்த்தைக் கோடிதான் – உனை
நேரில் கண்டால் மௌனமேன்
தூங்கவைக்கப் பாடினேன் – நான்
தூக்கமின்றி வாடினேன்

( தென்றலே தென்றலே...

புதன், 4 மே, 2011

மார்கழித் திங்களல்லவா - சங்கமம்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் :வைரமுத்து
 குரல்கள் : ஜானகி - உன்னிகிருஷ்ணன்  வருடம் : 1999

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

( மார்கழி திங்கள்...

இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

( மார்கழி திங்கள்

சூடித் தந்த சுடர்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆ...ஆ... ஆ...காதல் ஜோதி கலையும் ஜோதி…ஆ..ஆ..ஆ…
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா….

( மார்கழி திங்கள்...

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

காற்றே என் வாசல் வந்தாய் - ரிதம்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : உன்னிகிருஷ்ணன்-கவிதா பாட்வல்  வருடம் : 2000

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

( காற்றே என் வாசல்...

கார்காலம் அழைக்கும்போது
ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

( காற்றே என் வாசல்..

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

( காற்றே என் வாசல்..