நா.முத்துகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நா.முத்துகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 நவம்பர், 2016

எனக்குப் பிடித்த பாடல் - ஜூலி கணபதி



இசை : இளையராஜா பாடல் : நா.முத்துகுமார்
குரல்கள் : ஸ்ரேயா கோஷல் வருடம் : 2003


எனக்குப் பிடித்த பாடல் - அது
உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு - அது
உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

( எனக்குப் பிடித்த பாடல்

மெல்ல நெருங்கிடும் போது - நீ
தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது - நீ
நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

( எனக்குப் பிடித்த பாடல்

வெள்ளிக்கம்பிகளைப் போலே
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதே
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெங்கும்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போலே எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

( எனக்குப் பிடித்த பாடல்

எனக்குப் பிடித்த பாடல் - ஜுலி கணபதி



இசை : இளையராஜா பாடல் : நா.முத்துகுமார்
குரல்கள் : விஜய் ஏசுதாஸ் வருடம் : 2003


எனக்குப் பிடித்த பாடல் - அது
உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு - அது
உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

( எனக்குப் பிடித்த பாடல்

பித்துப் பிடித்ததைப் போலே - அடி
பேச்சு குளறுதே
வண்டு குடைவதைப் போலே விழி
மனசைக் குடையுதே
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

( எனக்குப் பிடித்த பாடல்

வெள்ளிக்கம்பிகளைப் போலே
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதே
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெங்கும்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போலே எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

( எனக்குப் பிடித்த பாடல்

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

உன்னாலே எந்நாளும் - தெறி



இசை : ஜி.வி.பிரகாஷ் பாடல் : நா.முத்துகுமார்
குரல்கள் : ஹரிஹரன் - சைந்தவி வருடம் : 2016


உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே !

சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே !!

உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி;
என் கண்கள் ஓரம் நீர்த்துளி...

உன் மார்பில் சாய்ந்து சாகத் தோணுதே... ஓ...ஓ...


( உன்னாலே எந்நாளும்...


விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்
மடி மீது சாய்ந்து கதைப்பேச வேண்டும்

முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழுநேரம் என் மேல் உன் வாசம் வேண்டும்

இன்பம் எதுவரை - நாம்
போவோம் அதுவரை

நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே... ஓ... ஓ...


( உன்னாலே எந்நாளும்...


ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதையாவும் பேச பல ஜென்மம் வேண்டும்

ஓ... ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்

காலம் முடியலாம் - நம்
காதல் முடியுமா

நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே... ஓ... ஓ...

( உன்னாலே எந்நாளும்...

வெள்ளி, 23 மார்ச், 2012

அழகே அழகே - ஒரு கல் ஒரு கண்ணாடி




இசை : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் : நா.முத்துகுமார்
குரல்கள் : முகேஷ், ஸ்ரீ மதுமிதா வருடம் : 2012


அழகே அழகே அழகின் அழகே நீயடி - உன்
அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி – என்
ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்
நீ தூண்டில்காரனைத் தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
பாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

( அழகே அழகே ....

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்
கண்கள் இரண்டும் காதல் சொல்லும் இருந்தும் நடித்தாய்
அடிக்கடி முள்ளென தைத்தாய்
ஆயினும் பூவென பூப்பாய்
இதயக் கதவை இறக்கம் கொண்டு எனக்காய் திறப்பாய்
இந்தக் காதல் என்பது ஒரு மழலைப் போன்றது
அது சிணுங்க சிணுங்கதான் கவனம் பிறக்கும்
உனைக் கெஞ்சிக் கேட்கிறேன்
எனைக் கொஞ்சக் கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய் தொடர்ந்து நடிக்கிறாய்
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம்வர
கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
பாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

பலப்பல கனவுகள் இருக்கு
அதை ஏன் சொல்லணும் உனக்கு
மனசுவிட்டு பேச நீயும் நண்பனா எனக்கு
பார்த்ததும் பிடித்தது உனக்கு
பழகிட தோணனும் எனக்கு
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு
நீ கோயில் தேரடி மரக்கிளையும் நானடி
என்னைக் கடந்துபோகையில் நொறுங்குது நெஞ்சம்
நீ காதல் கஜினியா பகல் கனவில் பவனியா
ஏன் துரத்தி வருகிறாய் நெருங்க நினைக்கிறாய்
உனக்கும் எனக்கும் எதுக்கு காதல் வலம்வர
கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

( அழகே அழகே ....

சனி, 29 அக்டோபர், 2011

முன்னந்தி சாரல் நீ - 7 ஆம் அறிவு



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : கார்த்திக் - மேகா  வருடம் : 2011

முன்னந்தி சாரல் நீ
முன்ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலை தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழியோரத்தில் வரும் கனவு நீ
ஹே..ஹே...பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே

( முன்னந்தி சாரல் நீ...

ஓ... அழகே ஓ... இமையழகே
ஏ... கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே...
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே...
அடி உன்னைத் தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்பு
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ....
ஹே..ஹே...பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே
ஓ..ஓ... வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே


அதிகாலை ஓ... அந்திமாலை
ம்... உனைத்தேடிப் பார்க்க சொல்லி போராடும்
உனைக்கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தை போலே
என்னை சுற்ற வைத்தாய் எங்கும் நில்லாமல்
தினம் அந்தரத்தின் மேலே
என்னைத் தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல்
ஹே..ஹே...பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே

( முன்னந்தி சாரல் நீ...

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஒரு மலையோரம் - அவன் இவன்



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : விஜய் ஜேசுதாஸ்-பேபி ஸ்ரீநிஷா
பேபி பிரியங்கா - பேபி நித்யஸ்ரீ
 வருடம் : 2011

ஒரு மலையோரம்
அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கைகோர்த்து என் தலைசாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லங்கொஞ்சி நீ பேச உள்ளமுருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதுமடா... இந்த ஜென்மம் தீருமடா...
ஹோ... ஹோ...

( ஒரு மலையோரம்...

பெண்ணே முதல்முறை உன் அருகிலே வாழ்கிறேன்
போதும் போதும் விடு உன் நினைவிலே தோய்கிறேன்
என்னானது எந்தன் நெஞ்சம் ஏனிந்த மாற்றமோ
பெண்ணானதும் நாணம் வந்து தன் வேலையைக் காட்டுமோ
உன் எதிரிலே....ஏ...ஏ...
எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே
என்னுள்ளிருந்து நீ பேச
இன்னுமென்ன நான் பேச
இந்த மயக்கம் போதுமடி
இன்னும் நெருக்கம் வேண்டுமடி...ஹோ..ஹோ...

( ஒரு மலையோரம்...

உன்னைக் காணும்வரை நான் கனவிலே வாழ்ந்தவன்
உன்னைக் கண்டேன் பெண்ணே உன் நினைவிலே வாழ்கிறேன்
என் தனிமையின் ஓரம் வந்து இனிமைகள் ஊட்டினாய்
என் தாயிடம் பேசும் போதும் வெறுமையைக் கூட்டினாய்
நம் காதலிலே....ஏ...ஏ...
மனமது புகையினை போலே
மறைத்தவர் யாருமே இல்லை
என்னுள் நீ சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மறைக்க
இந்த வார்த்தை போதுமடி
எந்தன் வாழ்க்கை மாறுமடி... பெண்ணே...

திங்கள், 2 மே, 2011

பேசுகிறேன் பேசுகிறேன் - சத்தம் போடாதே



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : நேஹா பேசின்  வருடம் : 2007

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா

( பேசுகிறேன் பேசுகிறேன்...

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோஹோ...
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே....
வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா...

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே ஓஹோஹோ...
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

( பேசுகிறேன் பேசுகிறேன்

சனி, 30 ஏப்ரல், 2011

அழகு குட்டிச்செல்லம் - சத்தம் போடாதே



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : சங்கர் மகாதேவன்  வருடம் : 2007

அழகு குட்டிச்செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளைக் கடத்தி போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போகமாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்க்கிந்த ஆராய்ச்சி
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி

( அழகு குட்டிச்செல்லம்...

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் அட்டினக்கால் தோரனை... தோரனை
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி

( அழகு குட்டிச்செல்லம்...

நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை தவழ்ந்த படி நீ ஓட்டி போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி

( அழகு குட்டிச்செல்லம்...

வியாழன், 28 ஏப்ரல், 2011

ஒரு தடவை சொல்வாயா - வசீகரா



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஹரிஹரன் - சின்மயி  வருடம் : 2002

ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்த்தாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூடி உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும் காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

( ஒரு தடவை...

நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம் வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது அன்பே எங்கு செல்வாய்
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்

( ஒரு தடவை...

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

விழி மூடி யோசித்தால் - அயன்



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : கார்த்திக்  வருடம் : 2008

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

( விழி மூடி யோசித்தால்...

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானா எந்தன் கால் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்தக் காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே

( விழி மூடி யோசித்தால்...

ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாய வலை அல்லவா புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒருபாரம் என்னைப் பிடிக்கும்

( விழி மூடி யோசித்தால்...

சனி, 23 ஏப்ரல், 2011

உருகுதே மருகுதே - வெயில்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : சங்கர் மகாதேவன்
ஸ்ரேயா கோஷல்
 வருடம் : 2006

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

உருகுதே மருகுதே… ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா ஓ...

( உருகுதே மருகுதே...

அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப்பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழுமலை தாண்டிதான்
எங்கருத்த மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டிப் போகிறேன்
ஓ... சாமி பார்த்து கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்க ஏ....

( உருகுதே மருகுதே ...

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடுதந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கச் சொல்லி கேட்கிறேன்
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னை சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ... மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

( ஓ... உருகுதே மருகுதே...

வியாழன், 21 ஏப்ரல், 2011

சென்னை செந்தமிழ் மறந்தேன் - M.குமரன் S/O மகாலக்ஷ்மி



 இசை : ஸ்ரீகாந்த் தேவா  பாடல் : நா.முத்துகுமார்,
 குரல்கள் : ஹரிஷ் ராகவேந்திரா  வருடம் : 2004

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டுக் கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ்...மறந்தேன் உன்னாலே...

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம் பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ்...முழுவதும் மறந்தேன்...

சகி உன்னிறம் ஆ...ஆ....
சகி உன்னிறம் செம்பருத்தி பூ நிறம்
சகி உன்னிறம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துக்கள் ஆயிரம்
உன்னை காணவே நிலவும் தோன்றிடும் ஆ...
உன்னை கானவே நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் ஒ....

காதல் கதக்களி
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன் ஹே...
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்

( சென்னை செந்தமிழ்...

வியாழன், 14 ஏப்ரல், 2011

உயிரிலே என் உயிரிலே - வெள்ளித்திரை



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : நரேஷ் ஐயர்  வருடம் : 2007

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஒடமா?

( உயிரிலே என்...

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா?
இனி தீயே வைத்து எரிந்தாலும் என் நெஞ்சம் வேகுமா...


( உயிரிலே என்...

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடைவண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும் பழுதான தேரடி

( உயிரிலே என்...

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நினைத்து நினைத்து - 7ஜி ரெயின்போ காலனி



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஸ்ரேயா கோஷல்  வருடம் : 2004

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ...
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் உனக்கு கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ...
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா....
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா கண்கள் திறந்திடு...

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா....
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா......
தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் இருந்தும் திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதலா உன்னுள் வாழ்கிறேன்

( நினைத்து நினைத்து...

நினைத்து நினைத்து - 7ஜி ரெயின்போ காலனி



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : கே.கே  வருடம் : 2004

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ...
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே...
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ...
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்லுவேன்
உதிர்ந்து போன மலர்களின் மௌனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்லுவேன்
உடைந்து போன வளையலின் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னேமே தூக்கம் கலைந்ததே...

( நினைத்து நினைத்து...

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்

( நினைத்து நினைத்து ...

திங்கள், 11 ஏப்ரல், 2011

எங்கேயோ பார்த்த மயக்கம் - யாரடி நீ மோகினி



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : உதித் நாராயண்  வருடம் : 2007

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுள் என்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விடைகள் எல்லாம் கேள்வி கேட்க

( எங்கேயோ பார்த்த…

ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேட்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2007

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன ?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன ?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

( வெண்மேகம்…

மஞ்சள் வெயில் நீ.. மின்னல் ஒளி நீ..
உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ…
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும்
எங்கு சென்று படித்தாய்?
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்
தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

( வெண்மேகம்…

திங்கள், 4 ஏப்ரல், 2011

காற்றிலே காற்றிலே - மதராசப்பட்டினம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2010

ஆயிரம் ஆயுதம் எதிர்வரும் போதும்
அன்பெனும் சக்தியை வென்றவரில்லை
காரிருள் நீங்கிடும் காலியில் மறுபடி
கிழக்கினில் ஒளி வருமே
பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்
பாதையில் பள்ளங்கள் பறித்திடும் போதும்
போர்களம் நடுவிலும் ரகசியமாக
பூவொன்று மலர்ந்திடுமே

காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே
கண்களின் நீரது காற்றினில் சேருதே
நீயென்று நானென்று தனியானது – இன்று
நாமென்று ஒன்றாகும் நிலையானது
நெஞ்சோடு நேசித்த பந்தமிது – இன்று
கைசேர கண்ணீரே விலையானது

( ஆயிரம் ஆயுதம் ....

நதிபோகும் வழியில் யாரும் அணைபோட்டு தடுத்திடக் கூடும்
மேகத்தில் அணைபோட வழியில்லையே
நிகழ்காலம் கண்ணின் முன்னே
வரும்காலம் கனவின் பின்னே
விதிபோடும் கணக்குக்கு விடையில்லையே
இரவும் பகலும் தொடரும்
வெயிலும் மழையும் தொடரும்
இதயம் இணையும் தருணம் வருமா
இருளும் ஒளியும் பழகும்
விடிந்தும் விடியா நிமிடம்
விடிந்தால் வாழ்க்கை தொடங்கும் கனவா

( பேய்களும் நரிகளும் ....

ஒருவானம் போதாதென்று பலவானம் கேட்போம் இன்று
கைகோர்த்து ஒன்றாக பறந்தோடவே
நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம்
இப்போது கைகள் சேர்த்தோம்
இறந்தாலும் இருப்போமே பிரியாமலே
இரவும் பகலும் யுத்தம்
இடையில் உயிரின் சத்தம்
இதயம் முழுதும் கேட்டால் சுகமே

எதிரும் புதிரும் பாரம்
எங்கள் நெஞ்சில் ஈரம
அன்பே என்றும் இன்பம் தருமே

( ஆயிரம் ஆயுதம் ....

பூக்கள் பூக்கும் தருணம் - மதராசப்பட்டினம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஆன்ட்ரியா-ஹரினி-ரூப் குமார்  வருடம் : 2010

பூக்கள் பூக்கும் தருணம் – ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலைப் பொழுதை - முழுமதியும்
பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லை இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லை இது எதுவோ
இரவும் விடியவில்லையே – அது விடிந்தால்
பகலும் முடிவதில்லையே – பூந்தளிரே....


வார்த்தை தேவை இல்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூகுதே
வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்லவேண்டும் எனக்கும் - பூந்தளிரே...

(பூக்கள் பூக்கும் தருணம் …

எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் இன்பமழை தூவுதே ...
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே
யாரென்று அறியாமல் பேர்கூட தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன்போகும் வழியெங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே...

செவ்வாய், 8 மார்ச், 2011

விழியிலே என் விழியிலே – வெள்ளித்திரை



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : சித்ரா  வருடம் : 2007

விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே
நான் என்னைக் காணாமல் தினம் உன்னில் தேடினேன்
என் கண்ணீர்த்துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்

( விழியிலே என் விழியிலே...

இமைகளிலே கனவுகளை விதைத்தேன்
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே
இங்கு வெறுங்காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உருவம் இல்லை என் விரலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே

( விழியிலே என் விழியிலே...

உள்ளிருக்கும் இதயத்துக்கு எதைப் புரியும்
யாருக்குத்தான் உன் காதல் விடைதெரியும்
காதல் சிரகானது இன்று சருகானது
என் உள்நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனித்திரையொன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா...

( விழியிலே என் விழியிலே...