வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தாயின் மணிக்கொடி - ஜெய் ஹிந்த்



இசை : வித்யாசாகர் பாடல் : வைரமுத்து
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருடம் : 1994


ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்!
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த் - என்
இந்திய தேசம் இது - ரத்தம்
சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது...

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்!
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்!!

ஜெய்ஹிந்த்...ஜெய்ஹிந்த்

வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ !
பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ !!
தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ !
பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ !!
பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா !
வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா !!
எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே!
இது தீயில் எழுந்து வந்த தேசமே !!

தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த் !
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த் !!

சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ ?
வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும் !!
மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ ?
சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும் !!
சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு !
சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு !!
புலி போல் எழுக; புயல் போல் விரைக - அட
இளைய ரத்தம் என்ன போலியா ?
எழுத வேண்டும் புதிய இந்தியா !!

சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த் - என்
இந்திய தேசம் இது - ரத்தம்
சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது

ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...

ஞாயிறு, 24 மே, 2015

அகரம் இப்போ சிகரம் ஆச்சு - சிகரம்



இசை : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல் : வைரமுத்து
குரல்கள் : கே.ஜே.ஏசுதாஸ் வருடம் : 1990


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில்
பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

சங்கீதமே சந்நிதி…
சந்தோஷம் சொல்லும் சங்கதி...
சங்கீதமே சந்நிதி...
சந்தோஷம் சொல்லும் சங்கதி...

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

கார்காலம் வந்தால் என்ன
கடுங்கோடை வந்தால் என்ன
மழை வெள்ளம் போகும்
கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய்யன்பு போகும்
மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே....
நம்பிக்கை உங்கள் கையிலே.....

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு தரவா இல்லை
நம்பிக்கையே நல்லது...
எறும்புக்கும் வாழ்கை உள்ளது...

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

சனி, 18 பிப்ரவரி, 2012

ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : சின்மயி  வருடம் : 2000

ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வானம் முடியும் இடம் நீதானே
காற்றைப்போல நீ வந்தாயே
சுவாசமாகி நீ நின்றாயே
மார்பில் ஊரும் உயிரே


( ஒரு தெய்வம் தந்த...

எனது சொந்தம் நீ எனது பகையும் நீ
காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ....

( ஒரு தெய்வம் தந்த...

எனது செல்வம் நீ எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ....

( ஒரு தெய்வம் தந்த...

வியாழன், 26 மே, 2011

பூவாசம் புறப்படும் பெண்ணே - அன்பே சிவம்



 இசை : வித்யாசாகர்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : விஜய் பிரகாஷ் - சாதனா சர்கம்  வருடம் : 2002

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல்சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

( பூவாசம் புறப்படும்...

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்
என் நெஞ்சத்தின் நிறம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...

( பூவாசம் புறப்படும்...

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞம் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா...

( பூவாசம் புறப்படும்...

என் மேல் விழுந்த மழைத் துளியே - மே மாதம்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : ஜெயசந்திரன் - சித்ரா  வருடம் : 1994

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

( என் மேல் விழுந்த...

மண்ணைத் திறந்தால் நீரிருக்கும் - என்
மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் - என்
உயிரைத் திறந்தால் நீயிருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் - என்
வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும் - என்
இமையைத் திறந்தால் நீயிருப்பாய்

( என் மேல் விழுந்த...

கிளையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ

( என் மேல் விழுந்த...

புதன், 25 மே, 2011

ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : சின்மயி  வருடம் : 2000

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் - நீ
கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் - நீ
கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதா னே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ எனது பகையும் நீ
காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ
பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால்-நீ
கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல் நீ வந்தாயே
சுவாசமாய் நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே

( ஒரு தெய்வம் தந்த பூவே ...

புதன், 4 மே, 2011

மார்கழித் திங்களல்லவா - சங்கமம்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் :வைரமுத்து
 குரல்கள் : ஜானகி - உன்னிகிருஷ்ணன்  வருடம் : 1999

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

( மார்கழி திங்கள்...

இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

( மார்கழி திங்கள்

சூடித் தந்த சுடர்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆ...ஆ... ஆ...காதல் ஜோதி கலையும் ஜோதி…ஆ..ஆ..ஆ…
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா….

( மார்கழி திங்கள்...

சனி, 30 ஏப்ரல், 2011

காதலிக்கும் ஆசை இல்லை - செல்லமே



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : கே.கே.-மஹதி-சின்மயி-டிம்மி  வருடம் : 2004

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை நான் முன்னாள்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தால் திட்டி திட்டி தித்திதாய்

( காதலிக்கும் ஆசையில்லை....

சந்திர சூரியர் எழுகையிலே உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே... விரிகிறதே...
அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமோ

நீ வெளிச்சத்தில் செய்து வாய்த்த ஒழி சிற்பமோ
ஹே மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ
ஹே மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ

( காதலிக்கும் ஆசையில்லை....

என் காதலி காதலி காதலி காதலி...
என்னை காதலி காதலி காதலி...

உன் முகம் கொண்ட பருவினிலும் வின் மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும் இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி... எனைக் கொல்லுதடி...
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே

காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போய்யா
உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை

என் காதலி காதலி காதலி காதலி...
என்னை காதலி காதலி காதலி...

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

எங்கே எனது கவிதை - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : சித்ரா-ஸ்ரீனிவாஸ்  வருடம் : 2000

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதா...
கவிதை தேடித்தாருங்கள் - இல்லை என்
கனவை மீட்டுத் தாருங்கள்...

( எங்கே எனது கவிதை...

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட
நூறு முறை பிறந்திருப்பேன்

( பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்

( எங்கே எனது கவிதை...

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்று வேண்டுதே

வேர்வை பூத்த உந்த சட்டை வாசம்
இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே கேட்குதே...

பாறையில் செய்தது என்மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

( எங்கே எனது கவிதை...

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன்



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : ஹரிஷ் ராகவேந்திரா - மஹதி  வருடம் : 2009

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என்க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில் ஏன் சேர்கிறாய்...

( நெஞ்சே நெஞ்சே நீ...

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும் பொய்யாக‌க் க‌ண்டேனே

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என்னாவி நான் ஏற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்...

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

( நெஞ்சே நெஞ்சே நீ...

க‌ள்வா ஏ க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே

காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டுப் போகாதே
காற்று நாம் பூமி ந‌மை விட்டுப் போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறிப் போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம்மாறிப் போக‌க் கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும் ந‌ம் காத‌ல் மாறாதே

( நெஞ்சே நெஞ்சே நீ...

கனா காண்கிறேன் கனா - ஆனந்த தாண்டவம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : நித்யஸ்ரீ-வினித்ரா-சுபா  வருடம் : 2009

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும்
வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

( கனா காண்கிறேன்...

என் தோழிகளும் உன் தோழர்களும் ஐயோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ ஆஹா அது இன்ப துன்பம்
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்
தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரைக் கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

( கனா காண்கிறேன்...

நம் பள்ளியறை நம் செல்ல அறை அன்பே அதில் பூக்கள் உண்டு
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் எனபதும் பெண் என்பதும் ஹையோ இனி அர்த்தமாகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்குவேன்
உடல்கொண்ட ஆசையல்ல உயிர்கொண்ட ஆசை எந்தன்
உயிர்போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுவேன்

( கனா காண்கிறேன்...

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

காதல் கடிதம் தீட்டவே - ஜோடி



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : உன்னிமேனன் - ஜானகி  வருடம் : 1999

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனாமையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

( காதல் கடிதம்...

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எதன் உயிரல்லோ...
பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கிறேன்

( காதல் கடிதம்...

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

( காதல் கடிதம்...

திங்கள், 25 ஏப்ரல், 2011

கையில் மிதக்கும் கனவா நீ - ரட்சகன்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : ஸ்ரீனிவாஸ்  வருடம் : 1997

கனவா இல்லை காற்றா கனவா நீ காற்றா

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திர தரையில் பாயிடவா

( கையில் மிதக்கும்...

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி
அதை கண்டு கொண்டேனடி...
( நிலவில்...

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது - உன்
பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது...
( காதல் தாய்மை...

உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது
உன் மேல் வந்ததொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது

( கையில் மிதக்கும்...

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலைபாயுதே



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : ஸ்வர்ணலதா  வருடம் : 2000

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

( எவனோ ஒருவன்…

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை

( எவனோ ஒருவன்…

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என்
காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் - நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்

( எவனோ ஒருவன்…

உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

( எவனோ ஒருவன்…

காற்றே என் வாசல் வந்தாய் - ரிதம்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : உன்னிகிருஷ்ணன்-கவிதா பாட்வல்  வருடம் : 2000

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

( காற்றே என் வாசல்...

கார்காலம் அழைக்கும்போது
ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

( காற்றே என் வாசல்..

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

( காற்றே என் வாசல்..

சனி, 23 ஏப்ரல், 2011

சின்ன சின்ன ஆசை - ரோஜா



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : மின்மினி  வருடம் : 1992

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை

( சின்ன சின்ன ஆசை...

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை
கார்குழலில் உலகை கட்டி விட ஆசை

( சின்ன சின்ன ஆசை...

சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை
வானவில்லை கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரத்து மேனி சேலை கட்ட ஆசை

( சின்ன சின்ன ஆசை...

பொன்மாலை பொழுது - நிழல்கள்



 இசை : இளையராஜா  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : , எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் :

பொன்மாலை பொழுது – இது ஒரு
பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள் - இது ஒரு
பொன்மாலை பொழுது...

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்...
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ...

( இது ஒரு பொன்...

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால், வேள்விகளை நான் செய்வேன்

( இது ஒரு பொன்...

வியாழன், 21 ஏப்ரல், 2011

பூவுக்கெல்லாம் சிறகு - உயிரோடு உயிராக



 இசை : வித்யாசாகர்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : கே.கே. - ஸ்ரீனிவாஸ்  வருடம் : 1998

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம் எல்லாம் காதல் செய்த மாயம்
இது எப்படி எப்படி நியாயம் எல்லாம் காதல் செய்த மாயம்

( பூவுக்கெல்லாம்...

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீலக் கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்கக் கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை


ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கைது செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுட்டுவிட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலர்ந்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

( பூவுக்கெல்லாம்...

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ - ரோஜாக்கூட்டம்



 இசை : பரத்வாஜ்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : ஸ்ரீனிவாஸ்  வருடம் : 2002

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ..
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ...
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ...

( ஆப்பிள் பெண்ணே...

பூவின் மகளே நீ யாரோ புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
என்னை நீ பார்க்கவில்லை என் உயிர் நொந்ததடி
பென்ணே நீ போன வழியில் என்னுயிர் போனதடி
எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

மின்னலைக் கண்டு கண்கள் மூடி
கண்களைத் திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியைக் கையில் கொள்ள
ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி
எங்கே விழுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ
இதுவரை ஏதும் தகவலில்லை
அழகே உன்னைக் காணாமல்
அன்னம் தண்ணீர் தொடமாட்டேன்
ஆகாயத்தின் மறுபக்கம்
சென்றால் கூட விடமாட்டேன்
உனை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்
எங்கோ ஓர் சாலை வளைவில்
உன் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

( ஆப்பிள் பெண்ணே...

பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால்
லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் ஐயோ பைத்தியம் என்று
பார்வையினாலே கொல்வாயா
உலகின் விளிம்பில் நீ இருந்தாலும்
அங்கும் வருவேன் அறிவாயா
உயிரைத் திருகி கையில் தந்தால்
ஓகே என்று சொல்வாயா
ஆமாம் என்று சொல்லிவிட்டால்
ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால்
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும்
மீண்டும் காதலிப்பேன்..
எங்கோ ஓர் சாலை வளைவில்
உன் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

( ஆப்பிள் பெண்ணே...

காதல் வந்தால் சொல்லி - இயற்கை



 இசை : வித்யாசாகர்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : திப்பு  வருடம் : 2003

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய..
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக - மனம்
வெட்டவெளியிலே வாடுதடி
சுட்ட மண்ணிலே மீனாக -மனம்
வெட்டவெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல்நீர் மட்டம் கூடுதடி...

( காதல் வந்தால்...

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே காதல் வந்த பின்பு
சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் என் கடலலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலமில்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறுக்கம்தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி

( காதல் வந்தால்...

பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன் உன்னை காணும் முன்பு - நீ
நடந்த மண்ணை அள்ளித் தின்றேன் உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நான் கண்திறந்த பின்பு - என்
அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னைக் கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம்தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு