தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 பிப்ரவரி, 2019

உயிரே உன்னை தமிழ் என்பதா - எல்.கே.ஜி.



இசை : லியோன் ஜேம்ஸ் பாடல் : பா.விஜய்
குரல்கள் : சித் ஸ்ரீராம் வருடம் : 2019


உயிரே உன்னை தமிழ் என்பதா ?
தமிழே உன்னை உயிர் என்பதா ??
இசையில் மெய் மறந்தாய் !
எழுத்தில் உயிர்மெய் கலந்தாய் !!
குமரி கண்டம் முதல் அண்டம் வரை நீதான் நிறைந்தாய் !!!
பேசத்தானே ஆசை முளைக்கும் !
பேசிப் பார்த்தால் மீசை முளைக்கும் !!
தொல்காப்பியரின் கைகளிலே தமிழே கணினி...
உயிர் எழுத்தினிலே ஆயுதத்தை ஏந்தும் மொழி நீ...

தமிழ் மகனே வாடா...
தலை நிமிர்ந்து வாடா...
தமிழ் மகளே வா வா...
தரணி வெல்ல வா வா...

தமிழ் மகனே வாடா...
துணிவோடு வாடா...
துயர் தீர்க்க வாடா...
தலை நிமிர்ந்து வாடா...
பணிவோடு வாடா...
படைகொண்டு வாடா...

தமிழ் மகளே வா வா...
துணிவோடு வாடா...
துயர் தீர்க்க வாடா...
தரணி வெல்ல வா வா...
பணிவோடு வாடா...
படைகொண்டு வாடா...


"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"


ஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும்
இதை உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்

கல்லணையில் பட்ட காற்றும்
காவிரியில் கொடியேற்றும்
ஓலைச்சுவடிக்குள் உள்ள அறிவியல் பார் போற்றும்

சிங்க இனம் என்றும் சீறும்
ஜல்லிக்கட்டு சொன்ன வீரம்
வீரம் மட்டுமல்ல காதல் சொல்ல சொல்ல தேன் ஊறும்

இமயம் அதன் முடியில் பெயர் எழுதிய தமிழன்
உலகில் எந்த உயிர்க்கும் சென்று உதவிடும் மனிதன்
தமிழன்...
தமிழன்...
தமிழன்...
தமிழன்...

தமிழ் மகனே வாடா...
துணிவோடு வாடா...
துயர் தீர்க்க வாடா...
தலை நிமிர்ந்து வாடா...
பணிவோடு வாடா...
படைகொண்டு வாடா...

தமிழ் மகளே வா வா...
துணிவோடு வாடா...
துயர் தீர்க்க வாடா...
தரணி வெல்ல வா வா...
பணிவோடு வாடா...
படைகொண்டு வாடா...

தமிழ் மகனே வாடா...
தலை நிமிர்ந்து வாடா...
தமிழ் மகளே வா வா...
தரணி வெல்ல வா வா...

தமிழ் மகனே வாடா...
தலை நிமிர்ந்து வாடா...
தமிழ் மகளே வா வா...
தரணி வெல்ல வா வா...

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி - பாரதியார் பாடல்கள்



இசை : - பாடல் : மகாகவி பாரதியார்
குரல்கள் : ராகுல் வருடம் : ----


வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
வளர்மொழி வாழிய வே!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !

இன்றெம்மை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
இன்றெம்மை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !

அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக !
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க !
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !

வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !
வாழிய பாரத மணித்திரு நாடு !
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !
வாழிய பாரத மணித்திரு நாடு !

வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !


செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

தமிழா நீ பேசுவது தமிழா - பாடலெடுத்து



இசை : கரிசல் கருணாநிதி பாடல் : காசி ஆனந்தன்
குரல்கள் : கரிசல் திருவுடையான் வருடம் : ----


பட்டினி கிடந்தது பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் - எந்தன்
கட்டுடல் வளைந்து கைகால் மெலிந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெருவோடு கிடந்தே
கீழ்நிலை உற்றாலும் - நமைத்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின்
துயர் துடைக்க மறப்பேனா ???

தமிழா நீ பேசுவது தமிழா ?
தமிழா நீ பேசுவது தமிழா ?

அன்னையை தமிழ் வாயால் மம்மி என்றழைத்தாய்
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்
இன்னுயிர் தமிழை கொன்று தொலைத்தாய்

தமிழா நீ பேசுவது தமிழா ?

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை
ஒய்ஃப் என்றாய் மனைவியை பார் உந்தன் போக்கை
இரவை நைட் என்றால் விடியாது வாழ்க்கை
இனிப்பை ஸ்வீட் என்றால் அறுத்தெறி நாக்கை

தமிழா நீ பேசுவது தமிழா ?

வண்டிக்காரர் கேட்டார் லெஃப்டா ரைட்டா
வழக்கறிஞர் கேட்டார் என்ன தம்பி ஃபைட்டா
துண்டுக்காரர் கேட்டார் கூட்டம் லேட்டா
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டால் ???

தமிழா நீ பேசுவது தமிழா ?

கொண்ட நண்பனை ஃபிரெண்டு என்பதா
கோலத்தமிழ் மொழியை ஆங்கிலம் தின்பதா
கண்டவரை எல்லாம் சார் என்று சொல்வதா
கண்முன்னே தாய்மொழி சாவது நல்லதா

தமிழா நீ பேசுவது தமிழா ?

பாட்டன் கையிலே வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டியின் உதட்டிலே லிப்ஸ்டிக்கா
வீட்டிலே பெண்களின் தலையிலே ரிப்பனா
வெள்ளைக்காரன்தான் நமக்கென்ன அப்பனா ???

தமிழா நீ பேசுவது தமிழா ?


ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

அமைதியில் ஒளியரும்பும் - பாட்டருவி



இசை : பாடல் : பாரதிதாசன்
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் வருடம் : ----

அதிகாலை

அமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்

( அமைதியில் ஒளி...

இமை திறந்தே தலைவி கேட்டாள் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்

( அமைதியில் ஒளி...

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைத்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்

( அமைதியில் ஒளி...

பெற்றவர் கூடத்தில் மனைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைக ளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்க லாயினர் அன்பு திருந்தி

( அமைதியில் ஒளி...

தமிழரென்று சொல்வோம் - பாட்டருவி



இசை : பாடல் : பாரதிதாசன்
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் வருடம் : ----


பகை நடுக்கம்

தமிழர் என்று சொல்வோம் - பகைவர்
தமை நடுங்க வைப்போம்
இமய வெற்பின் முடியிற் - கொடியை
ஏற வைத்த நாங்கள்.

( தமிழர் என்று...

நமத டாஇந் நாடு - என்றும்
நாமிந் நாட்டின் வேந்தர்
சமம்இந் நாட்டு மக்கள் - என்றே
தாக்கடா வெற்றி முரசை!

( தமிழர் என்று...

எந்த நாளும் தமிழர் - தம்கை
ஏந்தி வாழ்ந்த தில்லை.
இந்த நாளில் நம்ஆணை - செல்ல
ஏற்றடா தமிழர் கொடியை.

( தமிழர் என்று...

வையம் கண்ட துண்டு - நாட்டு
மறவர் வாழ்வு தன்னைப்
பெய்யும் முகிலின் இடிபோல் - அடடே
பேரி கைமு ழக்கு.

( தமிழர் என்று...

வாழ்வினில் செம்மையை - பாட்டருவி



இசை : பாடல் : பாரதிதாசன்
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் வருடம் : ----

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே !
மாண்புகள் நீயே என் தமிழ் தாயே !
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே ;
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே !

தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே !

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !

ஞாயிறு, 1 மே, 2011

தமிழுக்கும் அமுதென்று பேர் - பஞ்சவர்ணக்கிளி



 இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்  பாடல் : பாரதிதாசன்
 குரல்கள் : பி.சுசீலா  வருடம் : 1965

தமிழுக்கும் அமுதென்று பேர் ! – அந்த
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்னறு பேர் ! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் ! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருபித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர் !
தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உரிமை செம்ப்யிர்க்கு வேர்

( தமிழுக்கும் அமுதென்று...

தமிழ் எங்கள் இளமைக்கு பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் –இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன்

( தமிழுக்கும் அமுதென்று...

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள் வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

( தமிழுக்கும் அமுதென்று...