1984 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1984 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மே, 2011

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு - வைதேகி காத்திருந்தாள்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : ஜெயசந்திரன்  வருடம் : 1984

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது

( ராசாத்தி உன்ன...

கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

( ராசாத்தி உன்ன...

மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

( ராசாத்தி உன்ன...

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

சோலை புஷ்பங்களே - இங்கேயும் ஒரு கங்கை



 இசை : இளையராஜா கங்கை அமரன்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : கங்கை அமரன்-சுசீலா  வருடம் : 1984

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன

( சோலை புஷ்பங்களே...

கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா கங்கை வற்றி விடுமா
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமா கச்சேரியா தாளாதது நெஞ்சு
கொக்கு ஒன்னு காத்திருக்குது
தண்ணீரில் தத்தளித்து மீனிருக்குது

( சோலை புஷ்பங்களே...

உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கையிலே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கையிலே
பன்னீருக்கும் மண்ணென்னைக்கும் கல்யாணமாம் சாமி
காவலுக்கு நாதி இல்லையா
என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா

( சோலை புஷ்பங்களே...

சனி, 5 மார்ச், 2011

பிள்ளை நிலா – நீங்கள் கேட்டவை



 இசை : இளையராஜா  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : கே.ஜே.ஜேசுதாஸ்  வருடம் : 1984

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ...
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மன்மேலே துள்ளும் மான் போலே

( பிள்ளை நிலா...

எந்நாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்களெல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ எழைமனம் நினைக்கும்
தென்னை இளஞ்சோலை பாளை விடும் நாளை
கை இரண்டில் அள்ளிக்கொண்டு
காதோடு அன்னை மனம் பாடும் கண்கள் மூடும்

( பிள்ளை நிலா...

ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமியெல்லாம் அடங்கும்
சிங்கார தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
கூந்தலிலே முத்துச்சரம்
காப்பாத்தி கட்டி வைத்தாய் நீயே எங்கள் தாயே

( பிள்ளை நிலா...