1991 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1991 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 மே, 2011

எங்கிருந்தோ இளங்குயிலின் - பிரம்மா



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1991

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம் – கொண்ட
சஞ்சலங்கள் மறைய ...

( எங்கிருந்தோ இளங்குயிலின்...

நீங்காமல் தானே நிழல்போல நானே
வருவேன் உண் பின்னோடு எந்நாளுமே
பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய்
தவறாக எடைபோட்டு சென்றாலும்தான்
பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம்
இந்த பால் மனம்

( எங்கிருந்தோ இளங்குயிலின்...

பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு
மறைத்தாலும் என் கண்கள் எமாறுமா
புரியாத புதிரா விளங்காத விடையா
இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா
என்னைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லையே
வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும்
அந்த நாள் வரும்

( எங்கிருந்தோ இளங்குயிலின்...

வியாழன், 21 ஏப்ரல், 2011

அரைச்ச சந்தனம் - சின்னத்தம்பி



 இசை : இளையராஜா  பாடல் : கங்கை அமரன்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1991

செம்பவள முத்துக்கள சேர்த்து வச்ச சித்திரமே
தங்க வளை வைர வளை போட்டிருக்கும் முத்தினமே
வாய் திறந்து நீ சிரிச்சா பாத்திருக்கும் அத்தனையும்
நீ வளர்ந்துப் பார்த்திருந்தா தோத்து விடும் இத்தனையும்

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகு பெட்டகம் புதிய புத்தகம்ம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ...

( அரைச்ச சந்தனம்…

பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ
தேனடி அந்த திருவடி இவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ - அந்த
ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு
என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ

( அரைச்ச சந்தனம்…

மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும்
ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான்
பல ஜாலத்தோடு ஆளப் போகும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு
சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ

( அரைச்ச சந்தனம்…

வியாழன், 7 ஏப்ரல், 2011

நீ எங்கே - சின்னத்தம்பி



 இசை : இளையராஜா  பாடல் : கங்கை அமரன்
 குரல்கள் : ஸ்வர்ணலதா  வருடம் : 1991

நீ எங்கே... என் அன்பே ...
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே

விடிகிற வரையினில் கதைகளைப்படித்ததை நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இங்கு துடிக்குதே துடிக்குதே
கதையில்லை கனவில்லை உறவுகள் உணர்வுகள் உருகுதே உருகுதே
பிழையில்லை வழியில்லை அருவிகள் விழிகளில் பெருகுதே பெருகுதே
வாழும்பொது ஒன்றாக வாழவேண்டும் வா வா
விடியும்போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

வீதி என்றும் வெட்டவெளி பொட்டல் என்றும் வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் மொட்டைச் சுடுகாடு என்றும் தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா
எத்தன் என்றும் ஏழைப் பணக்காரன் என்றும் ஒடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சைபோடும் பக்தன் என்றும் உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இன்று
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே...

ஞாயிறு, 13 மார்ச், 2011

சுந்தரி கண்ணால் – தளபதி



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி  வருடம் : 1991

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

( சுந்தரி கண்ணால்...

வாய்மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய்விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேன் நிலவு நான் வாட ஏன் இந்த சோதனை
வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

( சுந்தரி கண்ணால்...

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனைத் தீண்டினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்

( சுந்தரி கண்ணால்...