2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஜூன், 2017

அம்மாடி உன் அழகோ - வெள்ளைக்கார துரை



இசை : டி.இமான் பாடல் : யுகபாரதி
குரல்கள் : சத்யபிரகாஷ் வருடம் : 2014


அம்மாடி உன் அழகு செமதூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன பார்த்துதான் தாடுமாறுறேன்
புயல் காத்துல பொரியாகுறேன்
அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

( அம்மாடி உன் அழகு...

முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போதை
பொட்ட புள்ள உன நான் பார்த்து
சொட்டு சொட்டா கரஞ்சேனே
ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால்நொரை
சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை
பூக்குற என தாக்குற

( அம்மாடி உன் அழகு...

கண்ணு ரெண்டு போதவில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயில காண
பத்து சென்மம் எடுப்பேனே
கட்டு செட்டா கனிஞ்ச உன்ன
கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர தெரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
ஏட்டுல எழும் பாட்டுல

( அம்மாடி உன் அழகு...


செவ்வாய், 6 ஜூன், 2017

விண்மீன் விதையில் - தெகிடி



இசை : நிவாஸ் கே பிரசன்னா பாடல் : கபிலன்
குரல்கள் : அபய் ஜோத்புர்கர் - சைந்தவி வருடம் : 2014


விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

( விண்மீன் விதையில் நிலவாய்…

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே... நீதானே...
எனக்குள் நானே... ஏற்பேனே...
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

( விண்மீன் விதையில் நிலவாய்…

ஒரு பெண்ணாக உன் மேல் நானே
பேராசை கொண்டேன்
உனை முன்னாலே பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே... நீயானேன்...
இவன் பின்னாலே... போனேனே...
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

( விண்மீன் விதையில் நிலவாய்…