2005 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2005 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 நவம்பர், 2012

பூ மீது யானை - டிஷ்யூம்




 இசை : விஜய் ஆண்டனி  பாடல் : குகை.மா.புகழேந்தி்
 குரல்கள் : மால்குடி சுபா  வருடம் : 2005

பூ மீது யானை பூ வலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ
கண்ணீர் கவிதைகள் இந்த கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே...
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே

( பூ மீது யானை பூ வலியை தாங்குமோ

ஏ... உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்துப் பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெரிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில் உடையாதே... உடையாதே...
உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்துப் பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெரிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில் உடையாதே
காதல் போலவே நோயும் இல்லையே
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே

( பூ மீது யானை பூ வலியை தாங்குமோ

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போலவே வலி தருமோ... ஆ..ஆ..ஆ..ஆ...
விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போலவே வலி தருமோ
வேறு வேறென நினைவு போகையில்
காதல் கொள்தல் பாவம்
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்

( பூ மீது யானை பூ வலியை தாங்குமோ


வெள்ளி, 27 மே, 2011

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா - ராம்



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : சினேகன்
 குரல்கள் : மதுமிதா  வருடம் : 2005

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

( விடிகின்ற பொழுது...

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே


காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா
யாரிடம் உந்தன்கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லரையே பக்கமடா

( விடிகின்ற பொழுது...

சனி, 30 ஏப்ரல், 2011

கடவுள் தந்த அழகிய வாழ்வு - மாயாவி



 இசை : தேவி ஸ்ரீ பிரசாத்  பாடல் : பழனிபாரதி
 குரல்கள் : எஸ்.பி.பி.சரண்-கல்பனா  வருடம் : 2005

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...

( கடவுள் தந்த அழகிய...

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ... ஒ..

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் என் நாளும்
நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

( கடவுள் தந்த அழகிய...

நாம் எல்லாம் சுவாசிக்க தனித்தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி

( கடவுள் தந்த அழகிய...

ஆராரிராரோ நான் இங்கே பாட - ராம்



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : சினேகன்
 குரல்கள் : கே.ஜே.ஜேசுதாஸ்  வருடம் : 2005

ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

( ஆராரிராரோ...

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

( ஆராரிராரோ...

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத பூமி நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற

( ஆராரிராரோ...

புதன், 27 ஏப்ரல், 2011

பூமிக்கு வெளிச்சம் - டிஷ்யூம்



 இசை : விஜய் ஆண்டனி  பாடல் : குகை.மா.புகழேந்தி
 குரல்கள் : காயத்ரி - ராகுல் நம்பியார்  வருடம் : 2005

நான் சொல்வது எல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

( பூமிக்கு வெளிச்சம்...

நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடிததாய்
ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காதல் வந்த பிறகு ஒட்டி கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரமில்லை

( பூமிக்கு வெளிச்சம்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீ பிடித்து எரியும்
நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை சிம்பொனி
மின்னலின் தங்கை நீ புரிகிறதே
தொட்ட உடன் உருகும் ஒட்டி கொண்டு பழகும்
புத்தம் புது மிருகமே தெரிகிறதே

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

திங்கள், 25 ஏப்ரல், 2011

மேற்கே மேற்கே மேற்கே தான் - கண்ட நாள் முதல்



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் :
 குரல்கள் : சங்கர் மகாதேவன் - சாதனா சர்கம்  வருடம் : 2005

மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக் காலம்
கடும் பனி வாடைக் காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ
மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே

ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம்
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா
இனி எதிரிகள் என்று எவரும் இல்லை
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே...
இது நீரின் தோளில் கைப்போடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே

( மேற்கே மேற்கே மேற்கே...

வாசல் கதவை யாரோ தட்டும் ஓசைக் கேட்டால்
நீதான் என்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ...
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமா

( மேற்கே மேற்கே மேற்கே...

சனி, 23 ஏப்ரல், 2011

ஒரு மாலை இளவெயில் - கஜினி



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : தாமரை
 குரல்கள் : கார்த்திக்  வருடம் : 2005

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
கண்டேனே.. கண்டேனே...

( ஒரு மாலை இளவெயில்...

பார்த்துப் பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா...
இவள் ஆயுள் நீண்ட மின்னலா...
உனக்கேற்ற ஆளாக என்னை மாற்றி கொண்டெனே

( ஒரு மாலை இளவெயில்...

பேசும் அழகினை கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே
பனியில் சென்றால் உன் முகம்
என் மேலே நீராய் இறங்கும்
ஓ தலை சாய்த்து பார்த்தாளே தடுமாறி போனேனே
லல லால லல லல லாலா
லல லால லல லல லாலா
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

( சற்று தொலைவிலே

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

நிழலினை நிஜமும் - ராம்



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : சினேகன்
 குரல்கள் : விஜய் ஜேசுதாஸ்  வருடம் : 2005


நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

( நிழலினை நிஜமும்...

நடமாடும் சாவமா நான் இங்கே இருக்க
விதி செய்த சதியா தெரியலம்மா
கடல் தூப்பும் அலையும் கடலில் தான் சேரும்
அது போல என்னையும் சேத்துக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா

திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகிப் போச்சு
சரி செய்ய வழியும் தெரியலம்மா
சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா
ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா
என்ன சுத்தி என்னென்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா
தூக்கத்தில உன்னை நானும் தொலைச்சேன் அம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா

( நிழலினை நிஜமும்...

சனி, 26 பிப்ரவரி, 2011

சுட்டும் விழிச்சுடரே - கஜினி



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
பாம்பே ஜெயஸ்ரீ
 வருடம் : 2005

சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...
என்னுலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப்பையில் உன் படம்
தொட்டுத்தொட்டு உரச என்னிதயம் பற்றிக் கொள்ளுதே
உன்விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன் - உன்னாலே
கண்விழித்து சொப்பனம் கண்டேன்....

(சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...

மெல்லினம் மார்பில் கண்டேன் வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்...
தூக்கத்தில் உளறல் கொண்டேன் தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன் - உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்றேன்
வண்டை உண்ணும் பூக்கள் என்றேன்

(சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...

மரங்கொத்திப் பறவையொன்று மனங்கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர்வரை தந்தேன்
தீயின்றி திரியுமின்றி மேகங்கள் எரியுமென்று
இன்றுதானே நானும் கண்டுகொண்டேன்
மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும்போது மழை அழகு - கண்ணா நீ
கோவப்பட்டால் வெயில் அழகு - கண்ணா நீ
கோவப்பட்டால் வெயில் அழகு

(சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...