1988 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1988 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 பிப்ரவரி, 2012

பொம்முக்குட்டி அம்மாவுக்கு - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : கே.ஜே.ஏசுதாஸ்  வருடம் : 1988

பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ...
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ...
வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்

ரெண்டு தாய்க்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முல்லை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீ அறிவாயோ (2)

உன்னை நினைத்து உருகிடும் மாது
உன்னை பிரிய மனம் துணியாது
பூவே பனிப்பூவே நீதான் இல்லாது
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

( பொம்முக்குட்டி …

பெற்ற தாய்படும் பாடு
பிள்ளை தானறி யாது
இது காக்கையின் கூடு
இங்கே பூங்குயில் பேடு  (2)

வந்த உறவை இவள் விடுவாளோ
சொந்த உறவை அவள் தருவாளோ
பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு
பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

( பொம்முக்குட்டி …

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

புஞ்சை உண்டு நஞ்சை - உன்னால் முடியும் தம்பி



 இசை : இளையராஜா  பாடல் : புலமைபித்தன்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1988

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா - இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா

( புஞ்சை உண்டு ...

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

( புஞ்சை உண்டு ...

ஆத்துக்குப் பாதை இன்று யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

( புஞ்சை உண்டு ...

வியாழன், 14 ஏப்ரல், 2011

தூங்காத விழிகள் - அக்னிநட்சத்திரம்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : ஜே.ஜேசுதாஸ்-ஜானகி  வருடம் : 1988

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணைதேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது

( தூங்காத விழிகள்…

மாமர இலை மேலே... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

( தூங்காத விழிகள்…

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறுரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ...

( தூங்காத விழிகள்…