| இசை : - | பாடல் : மகாகவி பாரதியார் |
| குரல்கள் : ராகுல் | வருடம் : ---- |
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
வளர்மொழி வாழிய வே!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !
இன்றெம்மை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
இன்றெம்மை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !
அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக !
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க !
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !
வாழிய பாரத மணித்திரு நாடு !
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !
வாழிய பாரத மணித்திரு நாடு !
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித் திருநாடு வந்தே மாதரம்
பதிலளிநீக்குYggg
பதிலளிநீக்குthis is my lesson song
பதிலளிநீக்குவணக்கம். பாடலின் கரோக்கி கிடைக்குமா உறவே.
பதிலளிநீக்கு