1999 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1999 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 மே, 2011

மார்கழித் திங்களல்லவா - சங்கமம்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் :வைரமுத்து
 குரல்கள் : ஜானகி - உன்னிகிருஷ்ணன்  வருடம் : 1999

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

( மார்கழி திங்கள்...

இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

( மார்கழி திங்கள்

சூடித் தந்த சுடர்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆ...ஆ... ஆ...காதல் ஜோதி கலையும் ஜோதி…ஆ..ஆ..ஆ…
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா….

( மார்கழி திங்கள்...

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

காதல் கடிதம் தீட்டவே - ஜோடி



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : உன்னிமேனன் - ஜானகி  வருடம் : 1999

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனாமையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

( காதல் கடிதம்...

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எதன் உயிரல்லோ...
பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கிறேன்

( காதல் கடிதம்...

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

( காதல் கடிதம்...

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

பூசு மஞ்சள் பூசு - கனவே கலையாதே



 இசை : தேவா  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1999

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று
என் கண்கள் பொய் சொல்லுமா
வேரில்லாமல் பூப்பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா - என்
நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா ஹோ...
நம்புமா என் உள்ளம் நம்புமா

(பூசு மஞ்சள்...

உயிர் நீங்கி போனவளே - என்
உயிர் வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுது
பாரம்மா என் வாழ்வை பாரம்மா
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை கீறுதே
தாங்குமா என்னுள்ளம் தாங்குமா
உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவள் யார்
உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார்
ஒரு தொடர்கதையே இங்கு விடுகதையா
அந்த விடையின் முதல் எழுத்தை
எந்தன் விதி வந்து மறைத்ததே
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
கண்களில் உன் பிம்பம் தங்குதே

(பூசு மஞ்சள்...

வடக்கே ஒரு அஷ்தமனம்
தெற்கே ஒரு சந்திரோதயம்
ஆகாயம் என்னோடு திசை மாறுதே
உண்மையா நான் என்ன பொம்மையா
ஒரு ஜென்மம் வாங்கி வந்து
இரு ஜென்மம் வாழுகிறேன்
இது என்ன கதை என்று விதி கேட்குதே
மாயமா என் கண்ணீர் மாறுமா
எங்கேயோ தொலைந்த விதை
இங்கே வந்து பூத்ததென்ன
முல்லைப்பூ என்றிருந்தேன்
முள்ளோடு பாய்ந்ததென்ன
நான் ஓட நினைக்க
நிழல் என்னை துரத்த
உயிர் தழைக்கும் பயணம்
எந்த திருப்பத்தில் முடியும்
ஓய்ந்ததே என் கால்கள் ஓய்ந்ததே
தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே

(பூசு மஞ்சள்..

பூசு மஞ்சள் பூசு - கனவே கலையாதே



 இசை : தேவா  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : அனுராதா பாட்வல்  வருடம் : 1999

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே வந்தது வாழ்வென்று
தாய் தந்தை வாழ்த்துக்களால்
இன்று என் காதல் ஈடுறுதே
ஏன் இந்த மாற்றங்களோ
இன்று என் கண்ணில் தேனூருதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே ஓ...
சிந்துதே கண்ணீரும் சிந்துதே

(பூசு மஞ்சள்...

கடல் நீரை கடன் வாங்கி என் கண் கொண்டு அழுதாலும்
நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
இடம் மாறி வந்தாலும் தடம் மாறி போகாமல்
என் காதல் கைக்கூட கண்டேனம்மா
சிந்துதே கண்ணீரும் சிந்துதே
எண்ணம் போல் வாழ்வு கண்டேன் எல்லோரும் வாழ்த்தட்டுமே
முந்நூறு ஆண்டு வரை என் மஞ்சள் வாழட்டுமே
ஏழு பிறப்பினிலும் மறு பிறப்பினிலும்
இந்த தந்தைக்கும் தாய்க்கும் வந்து மகளென்று பிறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே

(பூசு மஞ்சள்...

ஆண் என்றால் ஒரு வீடு பெண் என்றால் இரு வீடு
தாய்நாட்டு பண்பாடு தடை போடுமே
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
கிளை எங்கே போனாலும் என் வேர்கள் இங்கேதான்
என் ஜீவன் இங்கும் அங்கும் விளையாடுமே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
பொன்மாலை தந்தவனை எந்நாளும் காதலிப்பேன்
வெண்மேகம் சிறகு தந்தா விண்ணோடு வலம் வருவேன்
எந்தன் உயிர் மலரை உந்தன் திருவடியில்
தந்து உனக்குள் கரைந்து இந்த உலகத்தை மறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
பொங்குதே கண்ணீரும் பொங்குதே ஓ...

(பூசு மஞ்சள்...

வெள்ளி, 4 மார்ச், 2011

இருபது கோடி நிலவுகள் - துள்ளாத மனமும் துள்ளும்



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1999

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ...
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ...
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ...
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ

நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாருமில்லையே -ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

( இருபது கோடி ...

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றையொன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ
மானிடபிறவி என்னடி மதிப்பு- உன்
கால்விரல் நகமாய் இருப்பதே சிறப்பு
நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாருமில்லையே -ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

( இருபது கோடி ...

ஜுலை மாதம் பூக்கும் கொண்டை பூக்கள் போலே
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மஹாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீயுள்ள ஊரில் வசிப்பது பெருமை
நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாருமில்லையே -ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

( இருபது கோடி ...