ஏகாதசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏகாதசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 மே, 2017

கோண கொண்டக்காரி - மதயானைக்கூட்டம்



இசை : என்.ஆர்.ரகுநந்தன் பாடல் : ஏகாதசி
குரல்கள் : ஜி.வி.பிரகாஷ் வருடம் : 2013


கோண கொண்டக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே...
நான் பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

( கோண கொண்டக்காரி...

தெனம் தெனம் திருக குள்ள கேப்பையாட்டம்
என்ன திரிக்குறா
அய்யய்யோ கடுகு துண்டு இடைய வச்சி
கெறங்க அடிக்குறா

குமரி புள்ள நேசம் - அட
கோழி கொழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குறா

( கோண கொண்டக்காரி...

சொலக பாக்குறேன் இதயம் போல் தெரியுதே
அடுப்பு தீய போல் உசுரும் எரியுதே
காலுல நடக்குறேன் மனசுல பறக்குறேன்
அவ முகம் பாத்துட்டா அரையடி வளருரேன்

சேதாரம் இல்லாம செஞ்சதாரு அவள - அவ
பஞ்சாரம் போட்டுதான் கவுக்குறாளே ஆள
நான் ஆட்டு புழுக்க போல
சுடும் வெயிலு குள்ள கெடக்கேன்
அவ கூட்டி பெருக்கும் போது
நான் கூடக்குள்ள போவேன்

( கோண கொண்டக்காரி...

உதட்டு சிரிப்புல உசுரு கரையுதே
அவள நெனச்சுதான் வயிறு நெறயுதே
சோள தட்டதான் சொமைய தாக்குமா
ஆள சாய்க்குதே அள்ளிப்பூ ரெண்டுதான்

போரால சாவில்ல மாராலதான் சாவு
நூறாள தாக்குதே உசிலம்பட்டி சேவு
இங்க அருவா தூக்கத்தானே
நம்ம ஆளு கொறஞ்சு கிடக்கு
அவ பாத்து பிள்ள என்னப்போல
பெத்து கொடுக்கணும்

( கோண கொண்டக்காரி...

திங்கள், 19 செப்டம்பர், 2011

ஒத்த சொல்லால - ஆடுகளம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : ஏகாதசி
 குரல்கள் : வேல்முருகன்  வருடம் : 2010

ஹே...ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வெச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வெச்சு
நித்தங் குடிச்சு என்ன கொன்னாடா
ஏ...பொட்ட காட்டுல - ஆலங்கட்டி
மழ பெஞ்சு ஆறொன்னு ஒடுறத பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

என் பவுடர் டப்பா தீர்ந்துபோனது
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது
நான் குப்புரக்க படுத்து கெடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே
ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயா
மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே

( ஹே.. ஒத்த சொல்லால...

ஏ...கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவன் கண்ணழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழ செவப்பு முத்தாத எளம் சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்

( ஹே.. ஒத்த சொல்லால...

அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள்குறிச்சு தட்டு மாத்துவேன்
ஏ..ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாளே என்ன ஒருவாட்டி....

( ஹே ஒத்த சொல்லால...