2010 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2010 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : சினேகன்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பி.சரண்-பிரஷாந்தினி
 வருடம் : 2010

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
ஒரஞ்சு போச்சே நகரவே இல்லே
தின்ன சோறும் செரிக்கவே இல்லே
பொலம்புறேன் நானே...

உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுர சத்தம்
உன் பேரா கேக்கிறதே

( அய்யய்யோ நெஞ்சு...

உன்ன தொடும் அனல் காத்து
கடக்கையிலே பூங்காத்து
கொழம்பி தவிக்குதடி என் மனசு

ஹோ திருவிழா கடைகள போல
திணருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மிரளுறேன் ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே
என்னை எரிச்சுபுட்டே நீயே

( அய்யய்யோ நெஞ்சு...

மழை சாரல் விழும் வேளை
மண் வாசம் அனல் வீச
உன் மூச்சு தொடவே நான் மெதந்தேன்

ஹோ...கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நெனைச்சயே
ஈரத்திலே அணைக்கிற சொகத்த
பார்வையிலே கொடுத்தாயே

பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுர போதும் யாரோடும் சேரலை நான்

( அய்யய்யோ நெஞ்சு...

திங்கள், 19 செப்டம்பர், 2011

ஒத்த சொல்லால - ஆடுகளம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : ஏகாதசி
 குரல்கள் : வேல்முருகன்  வருடம் : 2010

ஹே...ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வெச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வெச்சு
நித்தங் குடிச்சு என்ன கொன்னாடா
ஏ...பொட்ட காட்டுல - ஆலங்கட்டி
மழ பெஞ்சு ஆறொன்னு ஒடுறத பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

என் பவுடர் டப்பா தீர்ந்துபோனது
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது
நான் குப்புரக்க படுத்து கெடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே
ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயா
மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே

( ஹே.. ஒத்த சொல்லால...

ஏ...கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவன் கண்ணழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழ செவப்பு முத்தாத எளம் சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்

( ஹே.. ஒத்த சொல்லால...

அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள்குறிச்சு தட்டு மாத்துவேன்
ஏ..ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாளே என்ன ஒருவாட்டி....

( ஹே ஒத்த சொல்லால...

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

மைனா மைனா - மைனா



 இசை : D இமான்  பாடல் : யுகபாரதி
 குரல்கள் : ஷான்  வருடம் : 2010

மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பன்னுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுப்புள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேலே கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்னை மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்னைத் தவிப்புல எரிஞ்சது முறையா முறையா
ஏலே.. ஏலே.. ஏலே.. ஏலே...

சிம்னிக்கு மண்ணெண்ணையைப்போல
சித்திரைக்கு உச்சி வெயில் போல
நீயும் எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக
சக்கரத்தைப்போல சுத்திவரும் ஆச
கண்ணுமைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
அடியே நீ மணலத் திரிச்ச கயிறா
கொடியே நீ உசுற கடைஞ்ச தயிரா

(மைனா...

கட்டவண்டி செல்லும் வழி தேட
உண்டிவில்லு ஜல்லிக்கல்லத் தேட
நானும் உன்னத்தேடி அலைஞ்சேனே மனவாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா நீ கலஞ்சா நெனப்பேன் நீர

(மைனா...

திங்கள், 4 ஏப்ரல், 2011

காற்றிலே காற்றிலே - மதராசப்பட்டினம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2010

ஆயிரம் ஆயுதம் எதிர்வரும் போதும்
அன்பெனும் சக்தியை வென்றவரில்லை
காரிருள் நீங்கிடும் காலியில் மறுபடி
கிழக்கினில் ஒளி வருமே
பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்
பாதையில் பள்ளங்கள் பறித்திடும் போதும்
போர்களம் நடுவிலும் ரகசியமாக
பூவொன்று மலர்ந்திடுமே

காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே
கண்களின் நீரது காற்றினில் சேருதே
நீயென்று நானென்று தனியானது – இன்று
நாமென்று ஒன்றாகும் நிலையானது
நெஞ்சோடு நேசித்த பந்தமிது – இன்று
கைசேர கண்ணீரே விலையானது

( ஆயிரம் ஆயுதம் ....

நதிபோகும் வழியில் யாரும் அணைபோட்டு தடுத்திடக் கூடும்
மேகத்தில் அணைபோட வழியில்லையே
நிகழ்காலம் கண்ணின் முன்னே
வரும்காலம் கனவின் பின்னே
விதிபோடும் கணக்குக்கு விடையில்லையே
இரவும் பகலும் தொடரும்
வெயிலும் மழையும் தொடரும்
இதயம் இணையும் தருணம் வருமா
இருளும் ஒளியும் பழகும்
விடிந்தும் விடியா நிமிடம்
விடிந்தால் வாழ்க்கை தொடங்கும் கனவா

( பேய்களும் நரிகளும் ....

ஒருவானம் போதாதென்று பலவானம் கேட்போம் இன்று
கைகோர்த்து ஒன்றாக பறந்தோடவே
நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம்
இப்போது கைகள் சேர்த்தோம்
இறந்தாலும் இருப்போமே பிரியாமலே
இரவும் பகலும் யுத்தம்
இடையில் உயிரின் சத்தம்
இதயம் முழுதும் கேட்டால் சுகமே

எதிரும் புதிரும் பாரம்
எங்கள் நெஞ்சில் ஈரம
அன்பே என்றும் இன்பம் தருமே

( ஆயிரம் ஆயுதம் ....

பூக்கள் பூக்கும் தருணம் - மதராசப்பட்டினம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஆன்ட்ரியா-ஹரினி-ரூப் குமார்  வருடம் : 2010

பூக்கள் பூக்கும் தருணம் – ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலைப் பொழுதை - முழுமதியும்
பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லை இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லை இது எதுவோ
இரவும் விடியவில்லையே – அது விடிந்தால்
பகலும் முடிவதில்லையே – பூந்தளிரே....


வார்த்தை தேவை இல்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூகுதே
வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்லவேண்டும் எனக்கும் - பூந்தளிரே...

(பூக்கள் பூக்கும் தருணம் …

எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் இன்பமழை தூவுதே ...
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே
யாரென்று அறியாமல் பேர்கூட தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன்போகும் வழியெங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே...