கரிசல் திருவுடையான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரிசல் திருவுடையான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

தமிழா நீ பேசுவது தமிழா - பாடலெடுத்து



இசை : கரிசல் கருணாநிதி பாடல் : காசி ஆனந்தன்
குரல்கள் : கரிசல் திருவுடையான் வருடம் : ----


பட்டினி கிடந்தது பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் - எந்தன்
கட்டுடல் வளைந்து கைகால் மெலிந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெருவோடு கிடந்தே
கீழ்நிலை உற்றாலும் - நமைத்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின்
துயர் துடைக்க மறப்பேனா ???

தமிழா நீ பேசுவது தமிழா ?
தமிழா நீ பேசுவது தமிழா ?

அன்னையை தமிழ் வாயால் மம்மி என்றழைத்தாய்
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்
இன்னுயிர் தமிழை கொன்று தொலைத்தாய்

தமிழா நீ பேசுவது தமிழா ?

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை
ஒய்ஃப் என்றாய் மனைவியை பார் உந்தன் போக்கை
இரவை நைட் என்றால் விடியாது வாழ்க்கை
இனிப்பை ஸ்வீட் என்றால் அறுத்தெறி நாக்கை

தமிழா நீ பேசுவது தமிழா ?

வண்டிக்காரர் கேட்டார் லெஃப்டா ரைட்டா
வழக்கறிஞர் கேட்டார் என்ன தம்பி ஃபைட்டா
துண்டுக்காரர் கேட்டார் கூட்டம் லேட்டா
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டால் ???

தமிழா நீ பேசுவது தமிழா ?

கொண்ட நண்பனை ஃபிரெண்டு என்பதா
கோலத்தமிழ் மொழியை ஆங்கிலம் தின்பதா
கண்டவரை எல்லாம் சார் என்று சொல்வதா
கண்முன்னே தாய்மொழி சாவது நல்லதா

தமிழா நீ பேசுவது தமிழா ?

பாட்டன் கையிலே வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டியின் உதட்டிலே லிப்ஸ்டிக்கா
வீட்டிலே பெண்களின் தலையிலே ரிப்பனா
வெள்ளைக்காரன்தான் நமக்கென்ன அப்பனா ???

தமிழா நீ பேசுவது தமிழா ?


வியாழன், 31 மார்ச், 2016

ஊரு ஓரம் தோட்டத்திலே - பாடலெடுத்து



இசை : ஜானகிராஜ் பாடல் : நவகவி
குரல்கள் : கரிசல் திருவுடையான் வருடம் : ----

ஊரு ஓரம் தோட்டத்திலே
முனியன் போட்டான் மொந்தன் வாழை
கவனமாக கேளுங்கம்மா - அந்த
கதைய இப்போ சொல்லி வாரேன்
கதைய இப்போ சொல்லி வாரேன்

அப்பன் பாட்டன் காலத்து சொத்து
அரைக்காணி நஞ்ச நெலம்
இன்னைக்கி சமஞ்ச சின்னப் பொண்ணாட்டம்
பொன்னா மின்னுற மண்ணுங்கய்யா
பொன்னா மின்னுற மண்ணுங்கய்யா

இளம்வாழ கெழங்கு நட்டு
பதமாக பாத்தி கட்டி
ஆத்துப்பக்கம் ஏத்தம் வச்சு
அல்லும் பகலும் நீரெறச்சு

காத்துப் பட்டா நோகுமுன்னு
கன்னுப் பட்டா தோசமுன்னு
கோட்ட மதிலாட்டம் வேலிகட்டி - உள்ள
குலுங்குது பார் வாழதோட்டம்
ஆயிரம் பூமயில் தோகை விரிச்சதோ
அசையுது பார் வாழதோட்டம்

( ஊரு ஓரம் தோட்டத்திலே...

வாழமரம் எட்டு மொழம்
வாழத்தாறு பத்து மொழம்
ஆயிரமாயிரம் பிஞ்சு விடும் - அவை
அத்தனையும் கிளி பச்சை நிறம்

தொட்டு தொட்டு நீவுறானே
தோட்டத்தச் சுத்தி பாக்குறானே
பட்ட கடனெல்லாம் தீருமுன்னு - அவன்
பாத்து பாத்து சொக்குறானே

தொட்டுப் புட்டா சுட்டுப்புடும்
அப்படி சிவக்கும் வாழப்பழம்
ஏழுமல தாண்டி மூங்கில வெட்டி
எடுத்து வந்து முட்டு வெச்சான்
பத்துமல தண்டி மூங்கில வெட்டி
பக்கத்தில் ஊனி நட்டு வெச்சான் - அவன்
பக்கத்தில் ஊனி நட்டு வெச்சான்

( ஊரு ஓரம் தோட்டத்திலே...

பள்ளிக்கு போகும் செல்லக்கண்ணு
பால்மணம் மாறாத காளைகன்னு
பெத்த மகனெனும் பாராம - ஒரு
ஒத்தப் பழங்கூட தாராம

அஞ்சு வருசத்து பஞ்சமடா - கண்ணு
அத்தன கஷ்டமும் தீருமாடா
கந்து வட்டியும் பேங்கு கடனும்
கழியட்டும் பொறு எம்மவனே

சீண்டாதேடா ராசான்னு
செல்லமகனுக்கு தோது சொல்லி
கண்ணுக்கு கண்ணா காத்த வாழ
கனி குலுங்குது பாருங்கம்மா
மயிலும் குயிலும் பாத்து பாத்து
மயங்கி நிக்குது பாருங்கம்மா

( ஊரு ஓரம் தோட்டத்திலே...

இப்படியான ஆசையிலே
இருக்கும் அந்த வேளையிலே
கும்புட்டு வந்த மாரியாத்தாள
நம்பி இருக்குற நாளையிலே

ஆள வெச்சு வெட்டி எடுத்து
அள்ளி போயிட்டான் கந்துக்காரன்
லோனு கடனில மூழ்கின நெலத்த
சப்தி செஞ்சுட்டான் சர்காரன்

கதையை கேட்ட தாய்மாரே
கதையை கேட்ட தந்தை மாரே
உங்க வீட்டிலும் எங்க வீட்டிலும்
இந்த கதைதானே நித்தம் நித்தம்
உழைக்கும் கூட்டம் ஒண்ணா சேர்ந்தா
நடக்குமா இந்த அக்கிரமம் ?
உழைக்கும் கூட்டம் ஒண்ணா சேர்ந்தா
நடக்குமா இந்த அக்கிரமம் ?

( ஊரு ஓரம் தோட்டத்திலே...

ஞாயிறு, 20 மார்ச், 2016

ஆத்தா உன் சேல - பாடலெடுத்து



இசை : ----- பாடல் : ஏகாதசி
குரல்கள் : கரிசல் திருவுடையான் வருடம் : ----

ஆத்தா உன் சேல - அந்த
ஆகாயத்தப் போல
தொட்டில் கட்டித் தூங்க
தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் - நான்
செத்தாலும் என்னப் பொத்த வேணும்
செத்தாலும் என்னப் பொத்த வேணும்

( ஆத்தா உன் சேல...

ஆங்... இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெறுந்தர விரிப்புல நான் படுத்துக் கெடந்ததுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
இறக்கென காயும் போது வானவில்லா தெரியும்
இத்துப்போன சேலையில் உன் சோகக்கதை புரியும்
கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா இருக்கும் - நீ
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்

( ஆத்தா உன் சேல...

அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேச்சதுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெக்கையில விசிரியாகும் வெயிலுக்குள்ள குடையாகும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
பொட்டிக்குள்ள மடிச்சு வெச்சேன் அழகு முத்து மாலை
காயம் பட்ட வெரல்களுக்கு கட்டுப்போடும் சேல
மயிலிறகா உஞ்சேல மனசுக்குள்ள விரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்

( ஆத்தா உன் சேல...