2008 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2008 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

என்ன புள்ள செஞ்ச நீ - ரா‌மன்‌ தே‌டி‌ய சீ‌தை‌‌



 இசை : வித்யாசாகர்  பாடல் : நெல்லை ஜெயந்தா
 குரல்கள் : வித்யாசாகர்  வருடம் : 2008


என்ன புள்ள செஞ்ச நீ ஹோய்...
பாவிப்பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஹோய்...
பாவிப்பய நெஞ்ச நீ
பார்கையில சொக்க வெச்ச
பறக்கத்தான் ரெக்க வெச்ச
திக்க வெச்ச திணற வெச்ச
திசையத்தான் உணர வெச்ச
தெக்க வெச்ச வள்ளுவனா ஒத்தையில
நிக்க வெச்ச

( என்ன புள்ள செஞ்ச நீ...

கொள்ளைக்காரன் நானே கொள்ளையாகி போனேன்
ஏய் மிச்சம்மீதி ஏதுமில்ல எல்லாம் தொலச்சேனே
தேதி போல நாளும் தேஞ்சுபோகும் தேகம்
நாளும் தேஞ்சபோதும் வளருதே காதல் தேயாம
தண்ணீரில் உண்டாகும் மீன்கள் - ஏய்
தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னால வாழ்கின்ற நெஞ்சம் - ஏய்
உன்னால ஏனிந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்

( என்ன புள்ள செஞ்ச நீ...


ஒன்ன பார்த்த வேளை உடம்பும் செங்கச்சூள - ஏய்
தெம்பரப்பு அருவியா நீயே வந்தாயே
பாத மண்ணை பிசஞ்சு பானை போல வளஞ்சேன் - ஏய்
இன்று நீயே என்னிடமே மாத்தி தந்தாயே
எப்போதும் ஒம்பேரச் சொல்லி
என் உள்நாக்கும் தண்டோரா போடும்
உப்பாத்தில் மீனாகத்தானே - ஏய்
அப்போதும் உன் பிம்பம் ஆடும்
என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்

( என்ன புள்ள செஞ்ச நீ...

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

நண்பா நண்பா - ரா‌மன்‌ தே‌டி‌ய சீ‌தை‌‌



 இசை : வித்யாசாகர்  பாடல் : நெல்லை ஜெயந்தா
 குரல்கள் : கார்த்திக்  வருடம் : 2008


நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
உனை நீ தாழ்வாய் பார்க்காதே
அட நீயே உன்னிடம் தோற்காதே
எதுவும் முடியும் என்று நினை – நீ
எழுந்து நடக்கும் ஏவுகணை

( நண்பா நண்பா...

நண்பா நண்பா உன் நெஞ்சில் எழுதடா
வானம் நோக்கி நீ வளரும் விழுதடா
தயக்கம் என்பது சொந்த சிறை – அதில்
தங்கி கிடப்பது உந்தன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை
உன் முயற்சி ஒன்றே அதற்கு விலை

( நண்பா நண்பா...

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

விழி மூடி யோசித்தால் - அயன்



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : கார்த்திக்  வருடம் : 2008

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

( விழி மூடி யோசித்தால்...

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானா எந்தன் கால் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்தக் காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே

( விழி மூடி யோசித்தால்...

ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாய வலை அல்லவா புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒருபாரம் என்னைப் பிடிக்கும்

( விழி மூடி யோசித்தால்...

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

அனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம்



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : தாமரை
 குரல்கள் : சுதா ரகுநாதன்  வருடம் : 2008

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

( அனல் மேலே...

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை - அதுதான்
இனி நிலாவின் கறை கறை...

( அனல் மேலே...

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க - கரை
சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

( அனல் மேலே...