தாமரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாமரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

கண்ணான கண்ணே - விஸ்வாசம்



இசை : டி.இமான் பாடல் : தாமரை
குரல்கள் : சித் ஸ்ரீராம் வருடம் : 2018


கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாயவா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாயவா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா

அலைகடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே பார்த்தேன் கண்ணே
புதை மணலில் விழுந்தே
புதைந்திடவே இருந்தேன்
குறுநகையை எறிந்தே மீட்டாய் என்னை
விண்ணோடும் மண்ணோடும் ஆடும் பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல்விட்டுப் போகும் என ஏதோ பயம் கூடும்
மயில் ஒன்றைப் பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாகத் தோன்றும் இதே வினாடி

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாயவா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா
நீ தூங்கும் போது முன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

கண்ணான கண்ணே... கண்ணான கண்ணே...

செவ்வாய், 10 மே, 2011

வசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : தாமரை
 குரல்கள் : பாம்பே ஜெயஸ்ரீ  வருடம் : 2000

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன்மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க-முன்
ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன்மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க-முன்
ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான்

( வசீகரா என்...

அடைமழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளுகுளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

( வசீகரா என்...

தினமும் நீ குளித்ததும் எனைத்தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை நீ
அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே

( வசீகரா என்...

திங்கள், 2 மே, 2011

உயிரிலே எனது உயிரிலே - வேட்டையாடு விளையாடு



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : தாமரை
 குரல்கள் : ஸ்ரீனிவாஸ்-மகாலட்சுமி  வருடம் : 2006


உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே

( உயிரிலே எனது...

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக
என்ன செய்வேனோ

( உயிரிலே எனது...

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்

( உயிரிலே எனது...

புதன், 27 ஏப்ரல், 2011

பார்த்த முதல் நாளே - வேட்டையாடு விளையாடு



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : தாமரை
 குரல்கள் : உன்னிமேனன் - பாம்பே ஜெயஸ்ரீ  வருடம் : 2006

பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்
என்பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே

காட்டிக் கொடுக்கிறதே கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகலிரவை
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழையானேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி
காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே

எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சாரியென்று சாரியென்று உனைப் போகச் சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

( காட்டிக் கொடுக்கிறதே...

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

( பார்த்த முதல்...

சனி, 23 ஏப்ரல், 2011

ஒரு மாலை இளவெயில் - கஜினி



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : தாமரை
 குரல்கள் : கார்த்திக்  வருடம் : 2005

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
கண்டேனே.. கண்டேனே...

( ஒரு மாலை இளவெயில்...

பார்த்துப் பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா...
இவள் ஆயுள் நீண்ட மின்னலா...
உனக்கேற்ற ஆளாக என்னை மாற்றி கொண்டெனே

( ஒரு மாலை இளவெயில்...

பேசும் அழகினை கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே
பனியில் சென்றால் உன் முகம்
என் மேலே நீராய் இறங்கும்
ஓ தலை சாய்த்து பார்த்தாளே தடுமாறி போனேனே
லல லால லல லல லாலா
லல லால லல லல லாலா
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

( சற்று தொலைவிலே

திங்கள், 18 ஏப்ரல், 2011

இதுதானா இதுதானா - சாமி



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : தாமரை
 குரல்கள் : சித்ரா  வருடம் : 2003

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவன்தானா இவன்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்

( இதுதானா...இதுதானா...

இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே...
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே...
மாடியின் வளைவினில் எனை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
திடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
வெட்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே

( இதுதானா...இதுதானா...

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பாரென என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உனை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ.. ஹாஹஹா....அஹ.. ஹாஹஹா.

மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

அனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம்



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : தாமரை
 குரல்கள் : சுதா ரகுநாதன்  வருடம் : 2008

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

( அனல் மேலே...

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை - அதுதான்
இனி நிலாவின் கறை கறை...

( அனல் மேலே...

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க - கரை
சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

( அனல் மேலே...

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

ஏதோ ஒரு பாட்டு - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : தாமரை
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1998

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீ மூட்டும் ஞாபகங்கண் நீரூட்டும்

(ஏதோ ஒரு...

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களுன் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

(ஏதோ ஒரு...

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சிணுங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்

(ஏதோ ஒரு...