2016 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2016 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

கண்ணம்மா கண்ணம்மா - றெக்க



இசை : இமான் பாடல் : யுகபாரதி
குரல்கள் : நந்தினி ஸ்ரீகர் வருடம் : 2016


கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே...
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே...

ஒளி வீசும்... மணிதீபம்...
அது யாரோ... நீ...

( கண்ணம்மா... கண்ணம்மா…

செம்பருத்தி பூவப்போல சினேகமான வாய்மொழி
செல்லங்கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால்நிலா உன் கையிலே சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே

கண்ணம்மா... கண்ணம்மா… நில்லம்மா...ஆ...
உன்னை உள்ளம் எண்ணுதம்மா

( கண்ணம்மா... கண்ணம்மா…

உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே

பாரதி உன்சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீதானென வாயார போற்றுவான்

கண்ணம்மா... கண்ணம்மா … என்னம்மா... ஆ...
வெட்கம் நெட்டி... தள்ளுதம்மா…

( கண்ணம்மா... கண்ணம்மா…


வியாழன், 18 ஆகஸ்ட், 2016

உன்னாலே எந்நாளும் - தெறி



இசை : ஜி.வி.பிரகாஷ் பாடல் : நா.முத்துகுமார்
குரல்கள் : ஹரிஹரன் - சைந்தவி வருடம் : 2016


உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே !

சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே !!

உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி;
என் கண்கள் ஓரம் நீர்த்துளி...

உன் மார்பில் சாய்ந்து சாகத் தோணுதே... ஓ...ஓ...


( உன்னாலே எந்நாளும்...


விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்
மடி மீது சாய்ந்து கதைப்பேச வேண்டும்

முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழுநேரம் என் மேல் உன் வாசம் வேண்டும்

இன்பம் எதுவரை - நாம்
போவோம் அதுவரை

நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே... ஓ... ஓ...


( உன்னாலே எந்நாளும்...


ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதையாவும் பேச பல ஜென்மம் வேண்டும்

ஓ... ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்

காலம் முடியலாம் - நம்
காதல் முடியுமா

நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே... ஓ... ஓ...

( உன்னாலே எந்நாளும்...