சினேகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினேகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : சினேகன்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பி.சரண்-பிரஷாந்தினி
 வருடம் : 2010

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
ஒரஞ்சு போச்சே நகரவே இல்லே
தின்ன சோறும் செரிக்கவே இல்லே
பொலம்புறேன் நானே...

உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுர சத்தம்
உன் பேரா கேக்கிறதே

( அய்யய்யோ நெஞ்சு...

உன்ன தொடும் அனல் காத்து
கடக்கையிலே பூங்காத்து
கொழம்பி தவிக்குதடி என் மனசு

ஹோ திருவிழா கடைகள போல
திணருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மிரளுறேன் ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே
என்னை எரிச்சுபுட்டே நீயே

( அய்யய்யோ நெஞ்சு...

மழை சாரல் விழும் வேளை
மண் வாசம் அனல் வீச
உன் மூச்சு தொடவே நான் மெதந்தேன்

ஹோ...கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நெனைச்சயே
ஈரத்திலே அணைக்கிற சொகத்த
பார்வையிலே கொடுத்தாயே

பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுர போதும் யாரோடும் சேரலை நான்

( அய்யய்யோ நெஞ்சு...

வெள்ளி, 27 மே, 2011

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா - ராம்



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : சினேகன்
 குரல்கள் : மதுமிதா  வருடம் : 2005

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

( விடிகின்ற பொழுது...

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே


காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா
யாரிடம் உந்தன்கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லரையே பக்கமடா

( விடிகின்ற பொழுது...

சனி, 30 ஏப்ரல், 2011

ஆராரிராரோ நான் இங்கே பாட - ராம்



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : சினேகன்
 குரல்கள் : கே.ஜே.ஜேசுதாஸ்  வருடம் : 2005

ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

( ஆராரிராரோ...

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

( ஆராரிராரோ...

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத பூமி நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற

( ஆராரிராரோ...

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

நிழலினை நிஜமும் - ராம்



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : சினேகன்
 குரல்கள் : விஜய் ஜேசுதாஸ்  வருடம் : 2005


நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

( நிழலினை நிஜமும்...

நடமாடும் சாவமா நான் இங்கே இருக்க
விதி செய்த சதியா தெரியலம்மா
கடல் தூப்பும் அலையும் கடலில் தான் சேரும்
அது போல என்னையும் சேத்துக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா

திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகிப் போச்சு
சரி செய்ய வழியும் தெரியலம்மா
சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா
ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா
என்ன சுத்தி என்னென்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா
தூக்கத்தில உன்னை நானும் தொலைச்சேன் அம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா

( நிழலினை நிஜமும்...