1990 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1990 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 மே, 2015

அகரம் இப்போ சிகரம் ஆச்சு - சிகரம்



இசை : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல் : வைரமுத்து
குரல்கள் : கே.ஜே.ஏசுதாஸ் வருடம் : 1990


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில்
பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

சங்கீதமே சந்நிதி…
சந்தோஷம் சொல்லும் சங்கதி...
சங்கீதமே சந்நிதி...
சந்தோஷம் சொல்லும் சங்கதி...

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

கார்காலம் வந்தால் என்ன
கடுங்கோடை வந்தால் என்ன
மழை வெள்ளம் போகும்
கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய்யன்பு போகும்
மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே....
நம்பிக்கை உங்கள் கையிலே.....

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு தரவா இல்லை
நம்பிக்கையே நல்லது...
எறும்புக்கும் வாழ்கை உள்ளது...

( அகரம் இப்போ சிகரம் ஆச்சு...

செவ்வாய், 10 மே, 2011

கற்பூர பொம்மை ஒன்று – கேளடி கண்மணி



 இசை : இளையராஜா  பாடல் : மேத்தா
 குரல்கள் : பி.சுசீலா  வருடம் : 1990

கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா

( கற்பூர பொம்மை...

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம்வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் என்றும் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா

( கற்பூர பொம்மை...

தாயன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் அட அது போதாது
தாய் போல யார் வந்தாலுமே
உன் தாயைப்போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன்குழல்
முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா

( கற்பூர பொம்மை...

சனி, 30 ஏப்ரல், 2011

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா - புது வசந்தம்



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : முத்துலிங்கம்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்-பி.சுசீலா  வருடம் : 1990

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு
பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது
இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே

( பாட்டு ஒன்னு...

ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம் தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்
பசியெடுத்தால் பாட்டை உண்டு திசைகள் தேடி சேர்ந்தோம்
ஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்

( பாட்டு ஒன்னு...

ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் - உமா ரமணன்  வருடம் : 1990

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

( ஆகாய வெண்ணிலாவே...

தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று

தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

கடல் போன்ற ஆசையில் மடல்வாழை மேனிதான் ஆட

நடு ஜாம வேளையில் நெடுநேரம் நெஞ்சமே கூட

( ஆகாய வெண்ணிலாவே...


தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கூட்டக் கூடும்

அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன

அலங்கார தேவதேவி அவதாரம் செய்ததென்ன

இசைவீணை வாடுதோ இதமான கைகளே மீட்ட

சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

( ஆகாய வெண்ணிலாவே...

திங்கள், 7 மார்ச், 2011

ஆலோலம் பாடும் தென்றலே - சிறையில் பூத்த சின்னமலர்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : மனோ - ஜானகி  வருடம் : 1990

ஆலோலம் பாடும் தென்றலே...
ஆகாயம் தேடும் திங்களே...
வட்ட வட்ட பொட்டுவைத்து
வண்ண வண்ண பூமுடிக்கவா...
சின்ன சின்ன கன்னங்களில்
உண்ணுகின்ற தேனெடுத்து வா...

( ஆலோலம் பாடும்...

உச்சிவெயில் சூடுபட்டு வங்கக்கடல் காய்வதில்லை
வீசும்போல் காற்றடித்து வெள்ளிமலை சாய்வதில்லை
சந்திரனைப் போல இங்கு சூரியனும் தேய்வதில்லை
மானிடரைப் போல இங்கு காதல் என்றும் மாய்வதில்லை
நேசமனம் சேர்ந்திருக்க காசுபணம் கேட்குமா
பேசுகின்ற பேதமெல்லாம் பாசங்களைத் தாக்குமா
வாழலாம் கூடவா... வாழலாம் கூடவா...
நாளெலாம் நான் சூடும் பூவே...


( ஆலோலம் பாடும்...

உன்னையொரு நாள்மறந்து என்மனது வாழ்ந்ததில்லை
உச்சரிக்கும் வார்த்தையெல்லாம் உன்னையன்றி வேறு இல்லை
பொன்னையள்ளி நான் கொடுக்க என்னிடத்தில் ஏதுமில்லை
என்னையள்ளி நான் கொடுப்பேன் உன்னுடைய கைகளிலே
கண்ணிரண்டில் காதலெனும் கோட்டைகட்டி வாழ்கிறேன்
ஊரறிய மாலையிட்டு உன்மடியில் சேர்கிறேன்
காலமே கூடலாம்... காலமே கூடலாம்...
மார்பிலே நான் மஞ்சம் போட...

( ஆலோலம் பாடும்...