எஸ்.ஏ. ராஜ்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.ஏ. ராஜ்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மே, 2011

சொல்லாமலே யார் பார்த்தது - பூவே உனக்காக



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : பழனிபாரதி
 குரல்கள் : ஜெயசந்திரன் - சித்ரா  வருடம் : 1996

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லு பச்சைக்கிளி
முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி

( சொல்லாமலே யார்...

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முன்னே போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலையா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கல் எந்தன் மடியா
நீ மட்டும் பொன்வீணை எந்தன் இடையா
இடையில் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள்ளு கண்மணி

( சொல்லாமலே யார்...

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
கை சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டுத் தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து
முள்மீது பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள்ளு கண்மணி

( சொல்லாமலே யார்...

ஆசை ஆசையாய் இருக்கிறதே - ஆனந்தம்



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்,  பாடல் : கலைக்குமார்
 குரல்கள் : கே.ஜே.ஏசுதாஸ்  வருடம் : 2001

ஆசை ஆசையாய் இருக்கிறதே
இதுப்போல் வாழ்ந்திடவே
பாசப் பூமழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

நம்மை காணுகின்ற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம்
அந்த சொர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்
சுகங்கள் என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்

( ஆசை ஆசையாய்...

நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்
அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே

( ஆசை ஆசையாய்...

பல நூறு வண்ணம் ஒன்றாக சேறும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வதைப் போல வாழ்ந்திருப்போம்
எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்
நாணலை போல் தானே – நம்
ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும் சந்தோஷம்

( ஆசை ஆசையாய்...

வானம் என்ன வானம் - ப்ரியமான தோழி



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : பா.விஜய்
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2003

வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்
வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும்
அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்
நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும்

விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம்
புல்வெளியின் மேலே பூத்துக் கிடப்போம்

( வானம் என்ன வானம்…

நெஞ்சிலே இந்த நெஞ்சிலே கடல் பொங்குதே ஆனந்தமாய்
கையிலே இந்த கையிலே வெற்றி வந்ததே ஆரம்பமாய்
அட வாழ்வில் இன்றே திறப்பு விழா
இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா
கடலுக்கிங்கே கைகள் தட்ட கற்றுத் தந்திடலாம்
பூவுக்கெல்லாம் ரெக்கை கட்டி
பறக்கச் சொல்லிடலாம்

( வானம் என்ன...

சொந்தமாய் ஒரு சூரியன் அந்த வானத்தைக்கேட்டால் என்ன
இல்லையேல் நாம் சொந்தமாய் ஒரு வானத்தத செய்தால் என்ன
ஏ பூவே பூவே என்ன சிரிப்பு
உன் வாசம் எல்லாம் வீட்டுக்கனுப்பு
சிகரம் என்ன சிகரம் எல்லாம் சின்னப்புள்ளிகளே
காற்றுக்கில்லை காற்றுக்கில்லை முற்றுபுள்ளிகளே

( வானம் என்ன...

சனி, 30 ஏப்ரல், 2011

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா - புது வசந்தம்



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : முத்துலிங்கம்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்-பி.சுசீலா  வருடம் : 1990

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு
பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது
இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே

( பாட்டு ஒன்னு...

ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம் தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்
பசியெடுத்தால் பாட்டை உண்டு திசைகள் தேடி சேர்ந்தோம்
ஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்

( பாட்டு ஒன்னு...

காதல் வெண்ணிலா கையில் - வானத்தைப் போல



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : பா.விஜய்
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2000

காதல் வெண்ணிலா கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
இமையாக நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன்
உனக்காக காத்திருப்பேன்

( காதல் வெண்ணிலா…

வானத்து நிலவாய் நீ இருந்தால்
உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால்
உனக்கு பதில் நான் உருகிடுவேன்
பூவனம் போலே நீ இருந்தால்
பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

( காதல் வெண்ணிலா…

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே
உதிரம் கொண்டு நிறமெடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும் உளியெடுப்பேன்
கவிதையைப் போல் உன்னை எழுதிடவே
உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

( காதல் வெண்ணிலா…

வியாழன், 28 ஏப்ரல், 2011

ஒரு தடவை சொல்வாயா - வசீகரா



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஹரிஹரன் - சின்மயி  வருடம் : 2002

ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்த்தாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூடி உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும் காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

( ஒரு தடவை...

நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம் வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது அன்பே எங்கு செல்வாய்
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்

( ஒரு தடவை...

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

என்ன இதுவோ என்னைச் - ஆனந்தம்



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : விவேகா
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2001

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி

( என்ன இதுவோ...

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது
கண்களால் சுவாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிபாடம் சொன்னது
இன்றுதான் என்மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி என் தலையணை நீயென நினைத்துக்கொள்வேன்
அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் அணைத்துக்கொள்வேன்
கோடை கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய்

( என்ன இதுவோ...

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோயிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னை பார்க்கும் நாளெல்லாம் சுவாசக்காற்று தேவையா

( என்ன இதுவோ...

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

ஏதோ ஒரு பாட்டு - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : தாமரை
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1998

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீ மூட்டும் ஞாபகங்கண் நீரூட்டும்

(ஏதோ ஒரு...

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களுன் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

(ஏதோ ஒரு...

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சிணுங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்

(ஏதோ ஒரு...

வெள்ளி, 4 மார்ச், 2011

இருபது கோடி நிலவுகள் - துள்ளாத மனமும் துள்ளும்



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1999

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ...
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ...
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ...
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ

நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாருமில்லையே -ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

( இருபது கோடி ...

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றையொன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ
மானிடபிறவி என்னடி மதிப்பு- உன்
கால்விரல் நகமாய் இருப்பதே சிறப்பு
நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாருமில்லையே -ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

( இருபது கோடி ...

ஜுலை மாதம் பூக்கும் கொண்டை பூக்கள் போலே
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மஹாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீயுள்ள ஊரில் வசிப்பது பெருமை
நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாருமில்லையே -ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

( இருபது கோடி ...

புதன், 2 மார்ச், 2011

பிரிவொன்றை சந்தித்தேன் - பிரியாத வரம் வேண்டும்



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2001

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை
நாம் என்ற நேரம் வரை தூவாதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே...
அன்பே அன்பே அன்பே அன்பே...

( பிரிவொன்றை சந்தித்தேன் ...

ஒருவரி நீ ஒருவரி நான் திருக்குரளாம் உண்மை சொன்னேன்
தனித்தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே
உன்கைகள் என்பேனா துடைக்கின்ற கைக்குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடிப்போனேன்
பிரிவினாலே நீயே ஆனேன்

( பிரிவொன்றை சந்தித்தேன் ...

கீழிமை நான் மேலிமை நீ பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேலிமை நீ பிரிந்ததனால் புரிந்துகொண்டேன் காதல் என்றே
நாம் பிரிந்த நாளில்தான் நம்மை நான் உணர்ந்தேன்
நம் பிறந்தநாளில் தான் நம் காதல் திறந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே ...

( பிரிவொன்றை சந்தித்தேன் ...