2002 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2002 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 மே, 2011

பூவாசம் புறப்படும் பெண்ணே - அன்பே சிவம்



 இசை : வித்யாசாகர்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : விஜய் பிரகாஷ் - சாதனா சர்கம்  வருடம் : 2002

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல்சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

( பூவாசம் புறப்படும்...

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்
என் நெஞ்சத்தின் நிறம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...

( பூவாசம் புறப்படும்...

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞம் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா...

( பூவாசம் புறப்படும்...

ஞாயிறு, 1 மே, 2011

என்னைத் தாலாட்டும் - உன்னை நினைத்து



 இசை : சிற்பி  பாடல் :
 குரல்கள் : உன்னிமேனன் - சுஜாதா  வருடம் : 2002

என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா
உன்னை நான் என்பதா

( என்னைத் தாலாட்டும்...

நதியாகா நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்
முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்க்கையிலே வனமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

( என்னைத் தாலாட்டும்...

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே
ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் ககியில் விளக்காகுமே
அன்பே நான் இருந்தேன் வெள்ளைக் காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில் நானே திரியாகிறேன்
தினம் திரியாகிறேன்

( என்னைத் தாலாட்டும்...

சனி, 30 ஏப்ரல், 2011

பொய் சொல்லக்கூடாது காதலி - ரன்



 இசை : வித்யாசாகர்  பாடல் : அறிவுமதி
 குரல்கள் : ஹரிஹரன் - சாதனா சர்கம்  வருடம் : 2002

பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

( பொய் சொல்லக்கூடாது…

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன்
கண்டவுடன் எனையே தின்றதடி விழியே
என்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழிச்சுடரே
நட்சத்திரப் பயிரே
ரெக்கை கட்டி வா நிலவே

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

( பொய் சொல்லக்கூடாது…

ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே
நீ ஒற்றைத் துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே
நெற்றிமுடி வழியே தப்பிவந்தேன் வெளியே
அடி பொத்திவைத்த புயலே
தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா நிலவே

நில் என்று கண்டித்தாய்
உள் சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான்
சொல்லாமல் வஞ்சித்தாய்

( பொய் சொல்லக்கூடாது…

வியாழன், 28 ஏப்ரல், 2011

ஒரு தடவை சொல்வாயா - வசீகரா



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஹரிஹரன் - சின்மயி  வருடம் : 2002

ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்த்தாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூடி உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும் காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

( ஒரு தடவை...

நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம் வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது அன்பே எங்கு செல்வாய்
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்

( ஒரு தடவை...