பழனிபாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழனிபாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மே, 2011

சொல்லாமலே யார் பார்த்தது - பூவே உனக்காக



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : பழனிபாரதி
 குரல்கள் : ஜெயசந்திரன் - சித்ரா  வருடம் : 1996

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லு பச்சைக்கிளி
முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி

( சொல்லாமலே யார்...

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முன்னே போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலையா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கல் எந்தன் மடியா
நீ மட்டும் பொன்வீணை எந்தன் இடையா
இடையில் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள்ளு கண்மணி

( சொல்லாமலே யார்...

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
கை சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டுத் தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து
முள்மீது பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள்ளு கண்மணி

( சொல்லாமலே யார்...

சனி, 30 ஏப்ரல், 2011

கடவுள் தந்த அழகிய வாழ்வு - மாயாவி



 இசை : தேவி ஸ்ரீ பிரசாத்  பாடல் : பழனிபாரதி
 குரல்கள் : எஸ்.பி.பி.சரண்-கல்பனா  வருடம் : 2005

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...

( கடவுள் தந்த அழகிய...

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ... ஒ..

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் என் நாளும்
நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

( கடவுள் தந்த அழகிய...

நாம் எல்லாம் சுவாசிக்க தனித்தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி

( கடவுள் தந்த அழகிய...

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

பாட்டுச் சொல்லி பாட சொல்லி - அழகி



 இசை : இளையராஜா  பாடல் : பழனிபாரதி
 குரல்கள் : சாதனா சர்கம்  வருடம் : 2001

பாட்டுச் சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டுக் கொள்ள கிட்டவந்து மங்களம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டிவந்த ரெட்டைக் குழந்தையடி..
சந்தனத்து சிந்து ஒன்று கட்டிக் கொண்டு மெட்டொன்று தந்ததடி....

( பாட்டுச் சொல்லி...

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யாரறிவார்...
வாழ்க்கை செல்லும் பாதைதனை யாருரைப்பார்
இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை

( பாட்டுச் சொல்லி...

புதிய இசைக் கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வமதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தியதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம்பருவம் அது எண்ண எண்ண மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கைப்பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை

( பாட்டுச் சொல்லி...

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

என்னை தாலாட்ட வருவாளோ - காதலுக்கு மரியாதை



 இசை : இளையராஜா  பாடல் : பழனிபாரதி
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1997

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

( என்னை தாலாட்ட...

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்...

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்...

( என்னை தாலாட்ட...

சனி, 2 ஏப்ரல், 2011

வண்ண நிலவே - நினைத்தேன் வந்தாய்



 இசை : தேவா  பாடல் : பழனிபாரதி
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1998


வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

( வண்ண நிலவே...

கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் வந்து தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரி என்ன
மெதுமெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே
பெயரைக் கூட சொல்லாமல் என் உயிரே பிழியாதே
நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா

(வண்ண நிலவே...

கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டேன் என் வழியென்ன
உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன
மழை மேகம் நான் ஆனால் உன் வாசல் வருவேனே
உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

(வண்ண நிலவே...