பா.விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 மே, 2011

ஓரு முகமோ இரு முகமோ



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : பா.விஜய்
 குரல்கள் : கிருஷ் - நரேஷ் ஐயர்  வருடம் : 2007

ஓரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ
ஈவன் விழிகல் குறி தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ

( ஓரு முகமோ இரு முகமோ...

நொடியில் நொடியில் முடிவெடுப்பான்
இடியின் மடியில் தினம் படுப்பான்
அடியில் வெடியில் உயிரெடுப்பான்
நிழல் போல் இருப்பான்
எதிரும் புதிரும் போல் இருப்பான்
அதிரும் செயலில் பூப்பறிப்பான்
உதிரும் உயிரில் கணக்கெடுப்பான்
நெருப்பாய் நடப்பான்
உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும்
ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்
ஓரு சமயம் இவன் செயல் நியாயம்
மறு சமயம் இவன் செயல் மாயம்
ஜகஜஜதோம் ஜஜொம் ஜகிட ஜகிட ஜகிட..

( ஓரு முகமோ இரு முகமோ...

தெறிக்கும் தெறிக்கும் இசைப்பிடிக்கும்
சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்
வெடிக்கும் வெடிக்கும் ஒலிப்பிடிக்கும்..
இரவின் தலைவன் ஹேய்...
எதையும் செய்வான் உடனுக்குடன்
தேனீர் விருந்து ஆபத்துடன்
செல்வான் வெல்வான் வேகத்துடன்
இயங்கும் இளைஞன்
ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே
உல் சென்று பார்த்தால் உறுமும் குணமே
அட போனால் போகட்டும் என்பான்
இவன் பகையை உணவென உண்பான்
ஜகஜஜதோம் ஜஜொம் ஜகிட ஜகிட ஜகிட ஜகக

( ஓரு முகமோ இரு முகமோ...

ஞாயிறு, 1 மே, 2011

வானம் என்ன வானம் - ப்ரியமான தோழி



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : பா.விஜய்
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2003

வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்
வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும்
அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்
நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும்

விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம்
புல்வெளியின் மேலே பூத்துக் கிடப்போம்

( வானம் என்ன வானம்…

நெஞ்சிலே இந்த நெஞ்சிலே கடல் பொங்குதே ஆனந்தமாய்
கையிலே இந்த கையிலே வெற்றி வந்ததே ஆரம்பமாய்
அட வாழ்வில் இன்றே திறப்பு விழா
இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா
கடலுக்கிங்கே கைகள் தட்ட கற்றுத் தந்திடலாம்
பூவுக்கெல்லாம் ரெக்கை கட்டி
பறக்கச் சொல்லிடலாம்

( வானம் என்ன...

சொந்தமாய் ஒரு சூரியன் அந்த வானத்தைக்கேட்டால் என்ன
இல்லையேல் நாம் சொந்தமாய் ஒரு வானத்தத செய்தால் என்ன
ஏ பூவே பூவே என்ன சிரிப்பு
உன் வாசம் எல்லாம் வீட்டுக்கனுப்பு
சிகரம் என்ன சிகரம் எல்லாம் சின்னப்புள்ளிகளே
காற்றுக்கில்லை காற்றுக்கில்லை முற்றுபுள்ளிகளே

( வானம் என்ன...

சனி, 30 ஏப்ரல், 2011

காதல் வெண்ணிலா கையில் - வானத்தைப் போல



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : பா.விஜய்
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2000

காதல் வெண்ணிலா கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
இமையாக நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன்
உனக்காக காத்திருப்பேன்

( காதல் வெண்ணிலா…

வானத்து நிலவாய் நீ இருந்தால்
உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால்
உனக்கு பதில் நான் உருகிடுவேன்
பூவனம் போலே நீ இருந்தால்
பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

( காதல் வெண்ணிலா…

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே
உதிரம் கொண்டு நிறமெடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும் உளியெடுப்பேன்
கவிதையைப் போல் உன்னை எழுதிடவே
உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

( காதல் வெண்ணிலா…

வெள்ளி, 4 மார்ச், 2011

அழகூரில் பூத்தவளே - திருமலை



 இசை : வித்யாசாகர்  பாடல் : பா.விஜய்
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சுஜாதா  வருடம் : 2003

அழகூரில் பூத்தவளே எனை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே எனை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானே உயிர்நூலில் கோர்ப்பேன்
உயிர்நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
( அழகூரில் பூத்தவளே...

நீ உடுத்தி போட்ட உடை என் மனதை மேயுதடா
நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி
இமையாலே நீ கிறுக்க இதழாலே நான் அழைக்க
கூச்சமிங்கே கூச்சப்பட்டுப் போகிறதே
சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து மேய்கிறதே
என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்போம்

( அழகூரில் பூத்தவளே...

நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஓடிஞ்சி சாய்ந்திடுவேன்
நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன்
குறிலாக நானிருக்க நெடிலாக நீ வளர்க்க
சென்னைத் தமிழ் சங்கத் தமிழ் ஆனதடி
அறியாமல் நானிருக்க அழகாக நீ திறக்க
காதல்மழை ஆயுள்வரை தூறுமடா
என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன்

அன்பூரில் பூத்தவனே எனை அடியோடு சாய்த்தவனே...