2007 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2007 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 மே, 2011

பேருந்தில் நீ எனக்கு - பொறி



 இசை : தினா  பாடல் : யுகபாரதி
 குரல்கள் : மது பாலகிருஷ்ணன் - மதுஸ்ரீ  வருடம் : 2007

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே

( பேருந்தில் நீ எனக்கு...

பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் வருகிற முதல் கூச்சம்
பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை
புகைப்படம் எடுக்கையில் திமிறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
தினமும் காலையில் எனது வாசலில்
இருக்கும் நாளிதழ் நீதானே...

( பேருந்தில் நீ எனக்கு...

தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல் படும் நகக் கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
செல்ஃபோன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
எழுதும் கவிதையின் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே

( பேருந்தில் நீ எனக்கு...

திங்கள், 30 மே, 2011

ஓரு முகமோ இரு முகமோ



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : பா.விஜய்
 குரல்கள் : கிருஷ் - நரேஷ் ஐயர்  வருடம் : 2007

ஓரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ
ஈவன் விழிகல் குறி தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ

( ஓரு முகமோ இரு முகமோ...

நொடியில் நொடியில் முடிவெடுப்பான்
இடியின் மடியில் தினம் படுப்பான்
அடியில் வெடியில் உயிரெடுப்பான்
நிழல் போல் இருப்பான்
எதிரும் புதிரும் போல் இருப்பான்
அதிரும் செயலில் பூப்பறிப்பான்
உதிரும் உயிரில் கணக்கெடுப்பான்
நெருப்பாய் நடப்பான்
உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும்
ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்
ஓரு சமயம் இவன் செயல் நியாயம்
மறு சமயம் இவன் செயல் மாயம்
ஜகஜஜதோம் ஜஜொம் ஜகிட ஜகிட ஜகிட..

( ஓரு முகமோ இரு முகமோ...

தெறிக்கும் தெறிக்கும் இசைப்பிடிக்கும்
சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்
வெடிக்கும் வெடிக்கும் ஒலிப்பிடிக்கும்..
இரவின் தலைவன் ஹேய்...
எதையும் செய்வான் உடனுக்குடன்
தேனீர் விருந்து ஆபத்துடன்
செல்வான் வெல்வான் வேகத்துடன்
இயங்கும் இளைஞன்
ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே
உல் சென்று பார்த்தால் உறுமும் குணமே
அட போனால் போகட்டும் என்பான்
இவன் பகையை உணவென உண்பான்
ஜகஜஜதோம் ஜஜொம் ஜகிட ஜகிட ஜகிட ஜகக

( ஓரு முகமோ இரு முகமோ...

வியாழன், 19 மே, 2011

இரு விழியோ சிறகடிக்கும் - பிரிவோம் சந்திப்போம்



 இசை : வித்யாசாகர்  பாடல் : நெல்லை ஜெயந்தா
 குரல்கள் : வினித்-சைந்தவி  வருடம் : 2007

இரு விழியோ... சிறகடிக்கும்...

இரு விழியோ சிறகடிக்கும்
இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு
உதயத்திலே வடம் பிடிக்கும்
காதலால்தானே

மணல்வெளிப் போல கிடக்கிற ஆசை
மழைத்துளிப் போல குதிக்கிற நாளை..
விளக்கொளிப் போல துடிக்கிற நெஞ்சம்
விசத்தறிப் போல அடிக்கிற நாளை..

நானும் இந்தத் தேதி
அடி காதல் தின்ற மீதி
தோழி நீயும் வாடி
இருத் தோளும் தானே தூளி

( இரு விழியோ..

ஒரு பாறை மெல்ல மெழுகானதென்ன
உனை கண்ட வேலை உயிர் பூத்ததென்ன
மழையாய் விழுந்தாய்

மூக்குத்திப் போலே ஆடாத நெஞ்சம்
நீ பார்த்த தாலே தோடாச்சு இன்று
புயலாய் ஆனாயே..

சங்கில் ஓசைப் போலே
உன்னில் தங்கிக் கொள்ள ஆசை
மின்ன்ல் போல கண்ணில்
உந்தன் பிம்பம் பூக்கும் ஆசை
உயிரோடு உயிர் பேச
அடிக் காதல் தானே பாஷை

இது வரமா...
மரங்களில் ஏங்கி கிரங்கிடும் தேகம்
கரங்களைத் தீண்டி உறங்கிடும் மாயம்
வெறும் சுகமா...

சுகங்களைத் தேடும் இடங்களின் ஓரம்
படங்களைப் போடும் நகங்களில் சாயம்

( இரு விழியோ...

கதை பேசிக் கொள்ள இதழ் தீயைத் தூண்டு
அலை பேசிப் போலே காதோரம் சிந்து
உடும்பாய் ஆவேனே

இவள் கொண்ட மேனி மலையாளச் சோலை
இதழாலே தொட்டால் மருதாணிச் சாலை
சிவந்தே போனேனே...

உறங்கும் எனது கனவு
அதில் உனது பெயரில் கனவு
மயங்கும் எனது இரவு
உந்தன் மனது பார்க்கும் உளவு
இதைக் காண வருமோடி
ஒரு கோடி வான நிலவு

இது குளிரா...
கொதிக்கிற மேகம் குலைகிற தேகம்
இருவரின் நெஞ்சில் சமுத்திரத் தாகம்

இளம் கதிரா...
இளங்கதிர் வந்து உரசிடும் காலம்
இவர்களின் தேகம் உறங்கிடும் நேரம்

( இரு விழியோ...

திங்கள், 2 மே, 2011

பேசுகிறேன் பேசுகிறேன் - சத்தம் போடாதே



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : நேஹா பேசின்  வருடம் : 2007

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா

( பேசுகிறேன் பேசுகிறேன்...

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோஹோ...
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே....
வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா...

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே ஓஹோஹோ...
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

( பேசுகிறேன் பேசுகிறேன்

சனி, 30 ஏப்ரல், 2011

அழகு குட்டிச்செல்லம் - சத்தம் போடாதே



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : சங்கர் மகாதேவன்  வருடம் : 2007

அழகு குட்டிச்செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளைக் கடத்தி போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போகமாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்க்கிந்த ஆராய்ச்சி
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி

( அழகு குட்டிச்செல்லம்...

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் அட்டினக்கால் தோரனை... தோரனை
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி

( அழகு குட்டிச்செல்லம்...

நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை தவழ்ந்த படி நீ ஓட்டி போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி

( அழகு குட்டிச்செல்லம்...

வியாழன், 21 ஏப்ரல், 2011

காதல் வைத்து காதல் - தீபாவளி



 இசை :  பாடல் :
 குரல்கள் : விஜய் ஜேசுதாஸ்  வருடம் : 2007

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உன்தன் குரல் மட்டும் கேட்டு இருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
ஆழகாய் ஐயோ தொலைந்தேன்

( காதல் வைத்து ...

தேவதை கதை கேட்ட போதேல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பாத்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கதில்தான்

( காதல் வைத்து ...

உன்னை கண்ட நாள் ஒளிவட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி...
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி...
கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய்

( காதல் வைத்து ...

வியாழன், 14 ஏப்ரல், 2011

உயிரிலே என் உயிரிலே - வெள்ளித்திரை



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : நரேஷ் ஐயர்  வருடம் : 2007

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஒடமா?

( உயிரிலே என்...

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா?
இனி தீயே வைத்து எரிந்தாலும் என் நெஞ்சம் வேகுமா...


( உயிரிலே என்...

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடைவண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும் பழுதான தேரடி

( உயிரிலே என்...

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

கத்தாழ கண்ணால குத்தாதே - அஞ்சாதே



 இசை : சுந்தர் சி.பாபு  பாடல் : கபிலன்
 குரல்கள் : நவீன் மாதவ்  வருடம் : 2007

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை
கூந்தல் கூரையில் குடிசையைப் போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு
கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை

கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவெனப் பூத்த மேலாக்கு நீ
தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவளவெனப் பேசும் உள்நாக்கு நீ
அய்யாவே அய்யாவே அழகியைப் பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக்காரிங்க

( கத்தாழ கண்ணால...

கரு கருவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கள் வாய் பேசுதே
பளபளவென பற்கள் கண் கூசுதே
பகலிரவுகள் என்னை பந்தாடுதே
உன்னோட கண்ஜாடை இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்

( கத்தாழ கண்ணால...

திங்கள், 11 ஏப்ரல், 2011

எங்கேயோ பார்த்த மயக்கம் - யாரடி நீ மோகினி



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : உதித் நாராயண்  வருடம் : 2007

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுள் என்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விடைகள் எல்லாம் கேள்வி கேட்க

( எங்கேயோ பார்த்த…

ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேட்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2007

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன ?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன ?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

( வெண்மேகம்…

மஞ்சள் வெயில் நீ.. மின்னல் ஒளி நீ..
உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ…
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும்
எங்கு சென்று படித்தாய்?
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்
தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

( வெண்மேகம்…

சனி, 2 ஏப்ரல், 2011

ரகசிய கனவுகள் - பீமா



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : யுகபாரதி
 குரல்கள் : ஹரிஹரன்-மதுஸ்ரீ  வருடம் : 2007


ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்

முதல் பிறை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம்
ஓ... உதடுகளால் உனை படிப்பேன் இருந்திடு அரைநிமிடம்
தொலைவது போல் தொலைவதுதான் உலகில் உலகில் புனிதம்

இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகின்ற சுகம் சுகமே
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே

( இறகே இறகே...

மறுபடி ஒரு முறை பிறந்தேனே
விரல் தொட புருவம் சிவந்தேனே
ஓ... இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ

சுடும் தனிமையை உணர்ந்திட மர நிழல் போல என்னை சூழ
நரம்புகளோடு குறும்புகள் நானும் எழுது என் கணக்கு
எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு

( ரகசிய கனவுகள்...

உயிர் அணு முழுவதும் உனைப் பேச
இமை தொடும் நினைவுகள் அனல் வீச
நினைச்சாலே செவப்பாகும் மருதாணி தோட்டம் நீ
தலை வைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ
எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே படர்வாயே
நெருங்குவதாலே நொறுங்கி விடாது இருபது வருடம்
ஹோ.. தவறுகளாலே தொடுகிற நீயோ அழகிய மிருகம்

( ரகசிய கனவுகள்...

குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு
முகிலினமே முகிலினமே முகவரி எழுதி கொடு
அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு

( இறகே இறகே...

செவ்வாய், 8 மார்ச், 2011

விழியிலே என் விழியிலே – வெள்ளித்திரை



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : சித்ரா  வருடம் : 2007

விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே
நான் என்னைக் காணாமல் தினம் உன்னில் தேடினேன்
என் கண்ணீர்த்துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்

( விழியிலே என் விழியிலே...

இமைகளிலே கனவுகளை விதைத்தேன்
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே
இங்கு வெறுங்காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உருவம் இல்லை என் விரலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே

( விழியிலே என் விழியிலே...

உள்ளிருக்கும் இதயத்துக்கு எதைப் புரியும்
யாருக்குத்தான் உன் காதல் விடைதெரியும்
காதல் சிரகானது இன்று சருகானது
என் உள்நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனித்திரையொன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா...

( விழியிலே என் விழியிலே...